Magalir Urimai Thogai Rs 1000 Icreased in Tamilnadu Budget
சுட சுட உருவாக்கும் பட்ஜெட்.. மகளிர் உரிமை தொகையை உயர்த்த திட்டம்? இனிமேல் ரூ.1000 அல்ல?
Magalir Urimai Thogai Rs 1000 Icreased in Tamilnadu Budget : சென்னை: தமிழ்நாடு பட்ஜெட்டில் மகளிர் உரிமை தொகையை உயர்த்துவது குறித்த அறிவிப்பு வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை மார்ச் 14ம் தேதி தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
2025-26ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை காலை 9.30-க்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்வார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அடுத்த சில வாரங்களில் மகளிர் உரிமை தொகை விரிவாக்கம் தொடர்பான அறிவிப்பு வரலாம் என்கிறார்கள். இந்த நிலையில்தான் இந்த உரிமை தொகை உயர்த்தப்படுமா என்ற கேள்வி உள்ளது. கர்நாடகாவில் ரூ.1500 வழங்கப்படுகிறது. மகாராஷ்டிராவில் இதே தொகை வழங்கப்படுகிறது. பஞ்சாப்பில் 1200 ரூபாய் பலருக்கு வழங்கப்படுகிறது. டெல்லியில் பாஜக 2500 ரூபாய் வாக்குறுதி அளித்துள்ளது.
ஆனால் இந்த திட்டத்தின் பிறப்பிடமான தமிழ்நாட்டில் ரூ.1000 மட்டுமே வழங்கப்படுவதால்.. இதை உயர்த்தி பட்ஜெட்டில் அறிவிப்பார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
3 மாதங்களில் தமிழ்நாட்டில் அனைத்து தகுதி உள்ள மகளிருக்கும் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதனால் சில வாரங்களில் இதற்கான வேலைகள் துவங்கும்.. புதிய விண்ணப்பங்கள் ஏற்கப்படும், ஆவணங்கள் சரிபார்க்கும் பணிகள் தொடங்கப்படலாம் என்கிறார்கள்.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களில் பல லட்சம் பேர் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து இருந்தனர். இப்படி தமிழ்நாட்டில் புதிதாக திருமணம் ஆனவர்கள், புதிதாக குடியேறியவர்கள், தனி வீடு பிரிந்தவர்கள் பலர் ரேஷன் கார்டுகளை வாங்க தொடங்கி உள்ளனர்.
இப்படி ரேஷன் கார்டு வாங்க விண்ணப்பித்தவர்கள் ஒருவர் இருவர் இல்லை. மொத்தமாக 2.80 லட்சம் பேர். இதில் இதுவரை ரேஷன் கார்டு வழங்கப்படாத மீதம் உள்ள ரேஷன் கார்டுகள் அடுத்த 2 வாரங்களில் பெரும்பாலும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் சென்று பொருட்கள் வாங்குபவர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. அதன்படி ரேஷன் கடைகளில் தற்போது வரை விண்ணப்பித்த 2.80 லட்சம் பேரில் 1 லட்சம் பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படவில்லை. 1.80 லட்சம் பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது.
ரேஷன் கார்டில் இருந்து பெயர் சேர்ப்பு, பெயர் நீக்கம் செய்வதற்கு புதிய முறை கடைபிடிக்கப்படுவதால் மக்கள் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் சில தாமதங்கள் ஏற்பட்டன. இந்த தாமதங்கள் களையப்பட்டு.. தற்போது ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இவர்கள் விண்ணப்பங்களை மேற்கொண்டு 1 வருடத்திற்கு மேல் ஆகிறது. ஆனால் இவர்களுக்கு ரேஷன் கார்டு கொடுக்கப்படாமல் போனதற்கு காரணம் லோக்சபா தேர்தல். லோக்சபா தேர்தல் விதிகள் காரணமாக ரேஷன் கார்டுகளை கொடுக்க முடியவில்லை. அதன் சரிபார்ப்பு பணிகளை செய்ய முடியவில்லை.
இப்போது அதெல்லாம் முடிந்து ரேஷன் கார்டுகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. கொஞ்சம் கொஞ்சமாக ஸ்மார்ட் கார்டு வடிவில் வழங்கப்படுகின்றன. ஆனாலும் இன்னும் பலருக்கு ரேஷன் கார்டுகளை வழங்கவில்லை.. புதிய விண்ணப்பங்களை ஆய்வு செய்யவில்லை என்று புகார்கள் உள்ளன.
புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிக்க வேண்டுமா?-எளிய வழிமுறை!- முழு விவரம் இதோ!..
மகளிர் உரிமை தொகை : புதிதாக விண்ணப்பித்துள்ளவர்களுக்கு 3 மாதத்தில் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இனி புதிதாக மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பம் செய்தால்.
அந்த விண்ணப்பங்கள் ஏற்க முடியுமா என்ற கேள்விக்கு தமிழ்நாடு சட்டசபையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்பே பதில் அளித்திருந்தார். யாருக்கும் விடுபடாமல் எப்படி மகளிர் உரிமைத் தொகை வழங்க முடியுமோ அப்படி வழங்கி வருகிறோம். எவ்வளவு பேருக்கு கூடுதலாக வழங்க முடியுமோ விதிகளுக்கு உட்பட்டு அவர்களுக்கு உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் புதிதாக விண்ணப்பித்துள்ள தகுதியான அனைவருக்கும் 3 மாதத்தில் ₹1,000 உரிமைத்தொகை தரப்படும் என்று சட்டசபையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்
மகளிர் உரிமை தொகை: தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டு பெற்றவர்களுக்கு வரும் நாட்களில் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகள், கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகள் ஆகியோர்களுக்கு எல்லாம் இந்த திட்டத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
ஆனால் ஏற்கனவே பென்ஷன் பெறக்கூடிய பெண்கள், அரசின் வேறு நிதிகளை வங்கியில் பெற கூடிய பெண்களுக்கு பணம் வழங்கப்படவில்லை. இவர்களுக்கு திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் போது அதற்கான அறிவிப்புகள் வரலாம் என்றுகூறப்படுகிறது .
வேறு சில ஆவணங்கள் சரியாக இல்லாத பெண்களுக்கும் பணம் வழங்கப்படவில்லை, அரசின் வேறு நிதிகளை வங்கியில் பெற கூடிய பெண்களுக்கு இந்த திட்டத்தில் இப்போது என்று இல்லாமல் எதிர்காலத்திலும் வாய்ப்பு வழங்கப்படலாம் என்கிறார்கள்,. மாறாக ஆவணங்கள் சரியில்லாத பெண்கள், இனி திருமணம் ஆகி குடும்ப தலைவி ஆகும் பெண்கள் ரூ.1000 பெறுவதற்கு விண்ணப்பம் செய்யலாம்.
இப்போது செய்ய முடியாது என்றாலும் அடுத்த சில நாட்களுக்கு பின் திட்டத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள். அப்போது விடுபட்டவர்கள் விண்ணப்பங்களை மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அமைச்சர் விளக்கம்: ஏற்கனவே கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ள அனைவருடைய விண்ணப்பங்களையும் பரிசீலித்து, தகுதியுள்ள அனைவருக்கும் வழங்க வேண்டும் என்பதே அரசின் இலக்காகும் என்று விளக்கம் அளித்துள்ளார்.
முன்னதாக தமிழ்நாடு ரேஷன் கார்டு உள்ள அனைவருக்கும் ‘மகளிர் உரிமைத்தொகை’ என பேசியதாக தகவல் வெளியான நிலையில் அதனை மறுத்து அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ளார். மகளிர் உரிமை தொகை விரிவாக்கம் செய்யப்படும்.
ஆனால் இதற்காக ரேஷன் கார்டு உள்ள எல்லோருக்கும் இந்த திட்டத்தின் கீழ் பணம் தரப்பட்டது. மாறாக விண்ணப்பித்துள்ள அனைவருடைய விண்ணப்பங்களையும் பரிசீலித்து, தகுதியுள்ள அனைவருக்கும் வழங்கப்படும். தகுதி இல்லாதவர்களுக்கு பணம் வழங்கப்பட வாய்ப்பு இல்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.