Table of Contents
ToggleNew Ration card | புதிய ரேஷன் கார்டு வேண்டும் என்றால் எப்படி விண்ணப்பிக்க வேண்டும்-முழு விவரம்
New Ration card Apply Details Tamil
New Ration card Apply Details Tamil | தமிழ்நாட்டில் புது ரேஷன் கார்டு எப்படி விண்ணப்பிக்க வேண்டும், என்னென்ன ஆவணங்கள் தேவை என்பது உள்ளிட்ட முக்கிய தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |

- New Ration card | நீங்கள் புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பிக்கிறீர்கள் என்றால் முதலில் தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான TNPDS இணையதளத்துக்கு செல்ல வேண்டும்.
- இங்கு இணையப்பக்கம் முழுவதும் தமிழில் இருக்கும். இல்லை என்றால் அந்த பக்கத்தை தமிழில் மாற்றிக் கொள்ளுங்கள். வலது பக்கத்தில் மின்னணு அட்டை சேவைகள் என்ற ஆப்சன் இருக்கும். அதில் புதிய மின்னணு அட்டை விண்ணப்பிக்க, மின்னணு அட்டை விண்ணப்பத்தின் நிலை என்பது உள்ளிட்ட ரேஷன் கார்டு சேவைகள் ஆன்லைனில் விண்ணப்பிக்கக்கூடிய ஆப்சன் இருக்கும்.
நீங்கள் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்கிறீர்கள் என்றால் புதிய மின்னணு அட்டை விண்ணப்பிக்க என்ற ஆப்சனை தேர்வு செய்யவும். இப்போது ரேஷன் கார்டு விண்ணப்பிக்க வேண்டிய பக்கத்துக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.
இங்கு நீங்கள் குடும்ப தலைவர் பெயர் (கணவர், மனைவி என யார் பெயர் வேண்டுமானாலும் கொடுக்கலாம்). தந்தை, கணவர், முகவரி, மாவட்டம், மண்டலம், கிராமம், மொபைல் எண், பின்கோடு உள்ளிட வேண்டும்.
குடும்ப உறுப்பினர்கள் பெயர்கள், அதாவது உங்கள் ரேஷன் கார்டில் யார் பெயர் எல்லாம் இருக்க வேண்டும் என நினைக்கிறீர்களோ அவர்களின் பெயர்கள் எல்லாம் குறிப்பிடலாம். ஆனால், யார் பெயரும் இன்னொரு ரேஷன் கார்டில் இருக்கக்கூடாது.
அடுத்ததாக உங்கள் ரேஷன் கார்டு எந்தவகையை சார்ந்ததாக இருக்க வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும். அரிசி அட்டை, சர்க்கரை அட்டை, பண்டகமில்லா அட்டை உள்ளிட்ட ஆப்சன்கள் இருக்கும். இதில் உங்களுக்கு தேவையான ஆப்சனை ஓகே செய்யவும்.

பின்னர் குடியிருப்பு சான்று கொடுக்க வேண்டும். ஆதார் அட்டை, பாஸ்போர்ட், மின்சார கட்டணம் அட்டை உள்ளிட்டவைகளை நீங்கள் ஆவணமாக கொடுக்கலாம். குடும்ப தலைவரின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஸ்கேன் செய்து அப்லோடு செய்ய வேண்டியிருக்கும்.
கேஸ் இணைப்பு விவரங்களையும் நீங்கள் கொடுக்க வேண்டியிருக்கும். இதனையெல்லாம் பூர்த்தி செய்த பிறகு கொடுக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் சரியாக இருக்கிறதா? என்பதை நீங்கள் ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.