School Holiday: மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! Thuthookudi March 4  Local Holiday

School Holiday: மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

Thuthookudi March 4  Local Holiday

Thuthookudi March 4  Local Holiday: அய்யா வைகுண்டசுவாமி 193 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வருகிற மார்ச் 4ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது என ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்டம், அய்யா வைகுண்டசுவாமி 193ஆவது பிறந்தநாள் விழா மாசி மாதம் 20-ம் தேதி (04.03.2025) அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு 04.03.2025 செவ்வாய் கிழமை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.
எனினும் அத்தியாவசிய பணிகள் / பணியாளர்களுக்கு இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது. இது செலாவணி முறிச் சட்டத்தின்படி (Negotiable Instruments Act 1881) பொது விடுமுறை நாளல்ல எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறைக்குப் பதிலாக 08.03.2025 இரண்டாம் சனிக்கிழமை அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், தெரிவித்துள்ளார்.

Leave a Comment

error: Content is protected !!