இன்றைய ராசி மற்றும் நட்சத்திர பலன்கள் Today Rasi Palan Happy News

Today Rasi Palan

இன்றைய ராசி மற்றும் நட்சத்திர பலன்கள்

Today Rasi Palan பங்குனி: 08 சனிக்கிழமை 22.03.2025 ராசி- பலன்கள் 

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group  Join
 Whatsapp ChannelJoin
TelegramJoin
 
Today Rasi Palan
Today Rasi Palan

 

குரு பெயர்ச்சி 2025 : இவைதான் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள், வெற்றிகள் குவியும்

இன்றைய ராசி மற்றும் நட்சத்திர பலன்கள் 22.03.2025

 

🔯 மேஷம் -ராசி: 🐐
நெருக்கமானவர்கள் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உருவாகும். ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் முன்னேற்றமான சூழ்நிலை ஏற்படும். கடன் செயல்களில் விவேகம் வேண்டும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். தாமதம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

⭐அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.
⭐பரணி : ஆதரவான நாள்.
⭐கிருத்திகை : முயற்சிகள் கைகூடும்.

♉ ரிஷபம் – ராசி: 🐂
தந்தையின் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் இருக்க வேண்டும். சிந்தனையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. வாழ்க்கை துணைவருடன் விட்டுக்கொடுத்து செல்லவும். வித்தியாசமான சிந்தனைகள் மூலம் குழப்பமான சூழல் உண்டாகும். எதிர்பார்த்த சில நிகழ்வுகள் காலதாமதமாக நிறைவேறும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். விவேகம் வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்.

⭐கிருத்திகை : ஆரோக்கியம் மேம்படும்.
⭐ரோகிணி :  விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
⭐மிருகசீரிஷம் : பொறுமையுடன் செயல்படவும்.

 

♊ மிதுனம்- ராசி: 🤼‍♀‍
உயர் அதிகாரிகள் இடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும். போட்டித் தேர்வுகளில் பங்கேற்று பரிசுகளையும், பாராட்டுகளையும் பெறுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகங்கள் மூலம் புதிய வாய்ப்புகள் உருவாகும். அச்சம் விலகும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம்.

⭐மிருகசீரிஷம் : வேறுபாடுகள் குறையும்.
⭐திருவாதிரை : மதிப்புகள் உயரும்.
⭐புனர்பூசம் :  வாய்ப்புகள் உருவாகும்.

♋ கடகம் – ராசி: 🦀
தொழில் சார்ந்த கருவிகள் மூலம் லாபங்கள் அதிகரிக்கும். இழுபறியான பணிகளைச் செய்து முடிப்பீர்கள். சிறு தூர பயணம் மூலம் ஆதாயம் உண்டாகும். செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகளை வெற்றி கொள்வீர்கள். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். வாகனம் தொடர்பான பயணங்களில் மாற்றங்கள் ஏற்படும். பகை விலகும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.

⭐புனர்பூசம் : லாபங்கள் அதிகரிக்கும்.
⭐பூசம் : வெற்றிகரமான நாள்.
⭐ஆயில்யம் :  மாற்றமான நாள்.

 

♌ சிம்மம் – ராசி: 🦁
நிர்வாகப் பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். மனதில் புது விதமான ஆசைகள் உருவாகும். முதுநிலைக் கல்வி விஷயங்களில் ஆலோசனைகள் கிடைக்கும். கடன் செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். இயந்திர பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான சூழல் காணப்படும். தீர்க்கமான சிந்தனைகள் மூலம் பாராட்டுக்கள் ஏற்படும். வரவு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம்.

⭐மகம் : முன்னேற்றம் ஏற்படும்.
⭐பூரம் : சிந்தித்துச் செயல்படவும்.
⭐உத்திரம் : பாராட்டுக்கள் கிடைக்கும்.

♍ கன்னி – ராசி: 👩
உறவினர்கள் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும். மனதில் தோன்றக்கூடிய கருத்துக்களை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். வாகனம் குறித்த சிந்தனைகள் மேம்படும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில செய்திகள் மூலம் அலைச்சல்கள் அதிகரிக்கும். பாராட்டு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்.

⭐உத்திரம் : லாபகரமான நாள்.
⭐அஸ்தம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
⭐சித்திரை : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

 

Today Rasi Palan

Today Rasi Palan

♎ துலாம் – ராசி: ⚖
குழந்தைகளின் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். சுபகாரிய விஷயங்கள் சாதகமாக அமையும். வெளியூர் பயணம் குறித்த சிந்தனைகள் மேம்படும். எதிர்பாராத பயணங்களால் வாய்ப்புகள் உண்டாகும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்லவும். நன்மை நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.

⭐சித்திரை :  இன்னல்கள் குறையும்.
⭐சுவாதி : சாதகமான நாள்.
⭐விசாகம் : அனுசரித்துச் செல்லவும்.

♏ விருச்சிகம் – ராசி: 🦂
வாக்கு சாதுரியத்தின் மூலம் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். கண் தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக குறையும். ஆன்மிக காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். பரந்த மனப்பான்மையின் மூலம் அனைவரிடத்திலும் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். சாஸ்திரம் கல்வி தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். செலவு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்.

⭐விசாகம் : பிரச்சனைகள் குறையும்.
⭐அனுஷம் :  சேமிப்புகள் அதிகரிக்கும்.
⭐கேட்டை : ஈடுபாடு உண்டாகும்.

♐ தனுசு – ராசி:  🏹
செய்யும் முயற்சிகளுக்கு ஏற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் உருவாகும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் காணப்படும். தொழில் தொடர்பான சிந்தனைகள் ஏற்படும். இணைய பணிகளில் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். பொருளாதார பிரச்சனைகள் குறைவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மற்றும் தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் மேம்படும். ஆதாயம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.

⭐மூலம் : முன்னேற்றமான நாள்.
⭐பூராடம் :  கவனம் வேண்டும்.
⭐உத்திராடம் : ஆரோக்கியம் மேம்படும்.

♑ மகரம் – ராசி: 🦌
திருப்பணி தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். அரசு தொடர்பான காரியங்களில் இருந்துவந்த இழுபறி குறையும். புதுவிதமான இடங்களுக்குப் பயணம் செய்வது தொடர்பான சிந்தனைகள் உருவாகும். ஆராய்ச்சி சார்ந்த எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகங்கள் மூலம் மாற்றங்கள் ஏற்படும். சுகம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.

⭐உத்திராடம் : வாய்ப்புகள் அமையும்.
⭐திருவோணம் : சிந்தனைகள் மேம்படும்.
⭐அவிட்டம் : மாற்றங்கள் ஏற்படும்.

♒  கும்பம் – ராசி: 🍯
தனவரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். இணைய பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள்மீது சிறுசிறு வதந்திகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். மனதிற்கு பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். எதிர்பார்த்த சில காரியங்களில் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். மகிழ்ச்சியான நினைவுகள் மூலம் மன அமைதி உருவாகும். புகழ் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்.

⭐அவிட்டம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.
⭐சதயம் : வதந்திகள் நீங்கும்.
⭐பூரட்டாதி : அமைதி உருவாகும்.

♓ மீனம் – ராசி:  🐟
வியாபார பணிகளில் லாபங்கள் மேம்படும். புதிய நபர்களின் அறிமுகங்கள் மற்றும் உயர் பதவிகளில் இருப்பவர்களின் ஆதரவுகள் திருப்தியை ஏற்படுத்தும். மந்திரம் உச்சாடலின் மூலம் மனவலிமை மேம்படும். உடற்பயிற்சி விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். மனதை குழப்பிய சிந்தனைகளிலிருந்து சுதந்திரமான சூழ்நிலைகள் ஏற்படும். அன்பு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் :  ஆகாயநீல நிறம்.

⭐பூரட்டாதி : லாபங்கள் மேம்படும்.
⭐உத்திரட்டாதி : திருப்தியான நாள்.
⭐ரேவதி : குழப்பம் விலகும்.

 

Daily Rasi Palan Click

TN Daily Jobs Click

Leave a Comment

error: Content is protected !!