கலைஞரின் கனவு இல்லத் திட்டம்: 1 லட்சம் புதிய வீடுகள் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
Kalaignar Kanavu Illam 2025
Kalaignar Kanavu Illam 2025 : தமிழ்நாடு அரசு, குடிசை வீடுகள் இல்லாத மாநிலமாக மாற்றும் முயற்சியில், “கலைஞர் கனவு இல்லம்” திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்ட 3,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இந்த திட்டம், ஏழை எளிய மக்களின் வீட்டு வசதி தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படுகிறது.
மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
- வீட்டின் அளவு: ஒவ்வொரு வீடும் 360 சதுர அடியில் கட்டப்படும். இதில் 300 சதுர அடி கான்கிரீட் கூரையுடன் RCC அமைப்பிலும், மீதமுள்ள 60 சதுர அடி தீப்பிடிக்காத பொருட்களால் கூரையாகவும் கட்டப்படும். பயனாளர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வடிவமைப்பை தேர்வு செய்யலாம்.
- கட்டுமான செலவு: ஒரு வீட்டின் கட்டுமான செலவு 3.50 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுவர்கள் செங்கல், ஏசிசி பிளாக் அல்லது இன்டர்லாக் சிஸ்டம் பொருட்களைக் கொண்டு கட்டப்பட வேண்டும். மண் சுவர்கள் அனுமதிக்கப்படாது. செலவை குறைக்கும் தொழில்நுட்பங்களையும், விரைவான கட்டுமான முறைகளையும் பயன்படுத்தலாம்.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
- ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.
- வீடற்றவர்கள்.
- குடிசை வீடுகளில் வசிப்பவர்கள்.
- ஓட்டு வீடுகளில் வசிப்பவர்கள்.
இந்த திட்டத்தில், தகுதியான பயனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
கூடுதல் தகவல்கள்:
- இந்த திட்டத்தின் மூலம் பயனாளர்கள் தங்கள் வீடுகளில் கூடுதல் வசதிகள் செய்ய விரும்பினால், வங்கிகள் மூலமாக கடன் வசதியும் செய்து தரப்படும்.
- வயதான பயனாளர்கள் மற்றும் சொந்தமாக வீடு கட்ட முடியாத பயனாளர்களுக்கு விற்பனையாளர்கள் மூலம் வீடு கட்டி தரப்படும்.
மேலும் தகவல்களுக்கு, தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.