TNPSC தேர்வாணையம் வெளியிட்டுள்ள மிக முக்கியமான அறிவிப்பு!!- முழு தகவல் உள்ளே!! TNPSC Group 2 2A Exam New Changes Annual Planner 2024 Good News

TNPSC Group 2 2A Exam New Changes Annual Planner 2024

TNPSC தேர்வாணையம் வெளியிட்டுள்ள மிக முக்கியமான அறிவிப்பு!!- முழு தகவல் உள்ளே!!

TNPSC Group 2 2A Exam New Changes Annual Planner 2024 டிஎன்பிஎஸ்சி குரூப் 2 குரூப் 2a தேர்வு ஒன்றாக இணைக்கப்பட்டு நடத்தப்பட்டு வந்திருந்த நிலையில் இந்த தேர்வில் பல்வேறு சிரமங்களும் நடைபெற்று வந்த நிலையில் தேர்வர்கள் அதிருப்தி தெரிவித்த பின்னர் சில மாற்றங்களை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் செய்துள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
TNPSC Group 2 2A Exam New Changes Annual Planner 2024
TNPSC Group 2 2A Exam New Changes Annual Planner 2024

டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் முக்கிய அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் ஆனது சமீபத்தில் குரூப் 1 2 4 தேர்வு நடைபெறும் தேதிகள் குறித்த திருத்தப்பட்ட ஆண்டு தேர்வு அட்டவணையை வெளியிட்டது. அதில் குரூப்-4 தேர்வுகள் ஜூன் ஒன்பதாம் தேதி நடைபெற உள்ளன. குரூப் 1 தேர்வானது ஜூலை 13ஆம் தேதியும் குரூப் 2 குரூப் 2a தேர்வுகள் செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெற உள்ளன என தெரிவித்துள்ளது.

குரூப் 4 தேர்வுகளுக்கான காலிப்பணியிடங்கள் 6244 நிரப்புவதற்கான தேர்வானது ஜூன் 9-ம் தேதி நடைபெற உள்ளது. மேலும் அதேபோல் குரூப் 1 தேர்வு காலி பணியிடங்கள் 90 நிரப்புவதற்கான தேர்வானது ஜூலை 13ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகளுக்கான தேர்வானது நேர்காணல் பணியிடங்கள் ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெற உள்ளது.

குரூப் 2 ,2a தேர்வு ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றம்

டி என் பி எஸ் சி குரூப் 2 குரூப் 2 ஏ தேர்வானது 2030 காலி பணியிடங்களில் நிரப்புவதற்கான தேர்வானது செப்டம்பர் 28ஆம் தேதி நடத்தப்படவுள்ளது ஜூன் 28ஆம் தேதி அந்த தேர்வுக்கான அறிவிக்கையானது வெளியிடப்பட உள்ளது. இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 குரூப் 2a தேர்வில் முக்கிய மாற்றம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதில் குரூப் 2 தேர்வு முறையில் எந்த மாற்றமும் இல்லை.

குரூப்-2ஏ முதல் நிலை தேர்வுகள் ஒன்றாக இணைத்து நடத்தப்பட உள்ளன. எனினும் முதன்மை தேர்வுகள் ஆனது தனித்தனியாக நடத்தப்படும் எனவும் அதே நேரத்தில் வழக்கம் போல குரூப் 2 மெயின் தேர்வு விவரித்து எழுதும் வகையில் டிஸ்கிரிப்டிவ் முறையில் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் குரூப் 2A முதன்மை தேர்வு அப்ஜெக்டிவ் முறையில் நடத்தப்பட உள்ளது. எனினும் குரூப் 2a முதன்மைத் தேர்வில் பின்பற்றப்படும் தமிழ் தகுதி தேர்வு மட்டும் விரித்து எழுதும் வகையில் நடைபெற உள்ளது.

Revised Annual Planner Group 2 2a

டி என் பி எஸ் சி பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்பு

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு பதிலாக இந்த தேர்வு நடைபெற உள்ளது.  குரூப் 2 ஏ தேர்வுக்கு மொத்தம் 2030 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுவாக குரூப் 4 தேர்வுக்கு பிறகு மிக அதிகமான பணியிடங்கள் குரூப் 2 தேர்வில் தான் இருக்கும். அந்த வகையில் 2000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன .இந்த எண்ணிக்கை இன்னும்  அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் tnpsc குறித்து அனைத்து தகவல்களையும் பெற்றுக்கொள்ள எங்கள் வாட்சப் குரூப்பில் இணையுங்கள்.

Leave a Comment

error: Content is protected !!