TNPSC தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
TNPSC Counselling Date Released 2024 Full Details
TNPSC Counselling Date Released 2024 Full Details தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிட்டவை என்னவென்றால் ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான மூல சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு தொடர்பான அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது. அதை பற்றிய முழு தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிக்கான எழுத்துத் தேர்வு கடந்த 27.05. 2023 முற்பகல் மற்றும் பிற்பகல் அன்று நடைபெற்று எழுத்து தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் தரவரிசை விவரங்கள் 19. 09. 2023 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
இந்த பணிக்கான மூல சான்றிதழ்கள்வானது 03.04. 2024 முதல் 10. 04. 2024 வரை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எண் 3 தேர்வாணையச் சாலை, (பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகில்) சென்னை -600 003 இல் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே இதில் கலந்து கொள்ள உள்ளவர்களின் தற்காலிக தெரிவாளர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த கலந்தாய்வுக்கு வர தவறுபவர்கள் மறு வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.