ஓட்டுனர் உரிமம் பெற இனி இது கட்டாயம் -வெளியான அதிகாரப்பூர் அறிவிப்பு!! Tamil Nadu Driving Licence New Rules Update June 10

ஓட்டுனர் உரிமம் பெற இனி இது கட்டாயம்- வெளியான அதிகாரப்பூர் அறிவிப்பு!!

Tamil Nadu Driving Licence New Rules Update June 10

Tamil Nadu Driving License New Rules Update June 10 ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான விதிகளில் சில மாற்றங்கள் ஜூன் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன .இந்த மாற்றங்கள் குறித்து நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 

புதிய ஓதுன உரிமத்திற்கு தேவையான ஆவணங்களை சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகமானது அப்டேட் செய்துள்ளது. இதில் புதிய விதிகள் ஆனது இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கு மாறுபடுகின்றன. இந்த மாற்றமானது ஆடியோகளில் ஆவணங்கள் பரிசோதனைகளின் தேவையை குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் விண்ணப்ப செயல் முறையை எளிதாக்குகிறது. இதேபோன்று தனியார் வாகன பயிற்சி மையங்களுக்கான விதிகளும் மாற்றப்பட்டுள்ளது. என்னென்ன மாற்றங்கள் குறித்து நாம் விரிவாக கீழே காணலாம்.

Tamil Nadu Driving Licence New Rules Update June 10
Tamil Nadu Driving Licence New Rules Update June 10

புதிய மாற்றங்கள்

இனி ஓட்டுநர் உரிமம் பெற அரசுப் போக்குவரத்து அலுவலகத்தில் (RTO) ஓட்டுநர் திறன் தேர்வு எழுத வேண்டியதில்லை. தனியார் ஓட்டுநர் பயிற்சி மையங்கள் இனி ஓட்டுநர் திறன் தேர்வுகளை நடத்தி சான்றிதழ்களை வழங்க அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதி ஜூன் 1, 2024 முதல் அமலுக்கு வருகிறது.

தனியார் ஓட்டுநர் பயிற்சி மையங்களுக்கான தகுதிகள்: இலகு ரக வாகனங்களுக்கான பயிற்சி மையம் அமைக்கக் குறைந்தது1 ஏக்கர் நிலம் தேவை. கனரக வாகனங்களுக்கான பயிற்சி மையம் அமைக்க 2 ஏக்கர் நிலம் தேவை. இந்த மையங்களில் தகுந்த தேர்வு நடத்துவதற்கான வசதிகள் இருக்க வேண்டும்.

பயிற்சி அளிக்கும் பயிற்றுநர்கள் குறைந்தது பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாகவும், குறைந்தது 5 ஆண்டுகள் ஓட்டுநர் அனுபவம் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். மேலும், உயிரியல் அளவியல் (Biometrics) மற்றும் தகவல் தொழில்நுட்ப அடிப்படைகளை அறிந்திருக்க வேண்டும்.

2-வது நாளாக சரிந்த தங்கத்தின் விலை பொதுமக்கள் உற்சாகம் சரியான நேரம் இது தான்!! Today Gold Rate Decreased Continue 2 Days June 10

பயிற்சி காலம்: இலகு ரக வாகனங்களுக்கான பயிற்சி குறைந்தது 4 வாரங்கள் (29 மணி நேரங்கள்) கொண்டதாக இருக்கும். இது கோட்பாடு மற்றும் நடைமுறை என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படும். தியரி பயிற்சி 8 மணி நேரங்களும், பிராக்டிக்கல் பயிற்சி 21 மணி நேரங்களும் கொண்டதாக இருக்கும்.

கனரக வாகனங்களுக்கான பயிற்சி 6 வாரங்கள் கொண்டதாக இருக்கும். இதில் தியரி பயிற்சி 8 மணி நேரங்களும், பிராக்டிக்கல் பயிற்சி 31 மணி நேரங்களும் கொண்டதாக இருக்கும். மாற்றத்தின் நோக்கம்: இந்த விதி மாற்றத்தின் மூலம், இலகு மற்றும் கனரக வாகனங்களை ஓட்டும் ஓட்டுநர்களின் தரத்தை உயர்த்துவதே அரசின் நோக்கமாகும். மேலும் இந்த தனியார் அமைப்புகளை மத்திய அரசு உரிய முறையில் சோதனை செய்து அங்கீகாரம் அளிக்கும்.

கட்டணங்கள்:

கற்றவர் உரிமம் கட்டணம் – ரூ.200

கற்றவர் உரிமம் புதுப்பித்தல் கட்டணம் – ரூ.200

சர்வதேச உரிமம் கட்டணம் – ரூ.1000

ஜூன் 10 இன்று அறிவித்த புதிய மாற்றம்

மத்திய மோட்டார் வாகன விதியின்படி இனி 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் பதிவு பெற்ற மருத்துவரிடம் மருத்துவச் சான்றிதழ் பெற்ற பின்னரே ஓட்டுநர் உரிமம் பெற இயலும் என தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் அறிவித்துள்ளார் .பழைய ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்கவும் இந்த உத்தரவு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது மருத்துவ சான்றிதழை ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Leave a Comment

error: Content is protected !!