தமிழக பள்ளி மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறை வெளியிட்ட மகிழ்ச்சி அறிவிப்பு இன்று முதல் ஆரம்பம்
TN School Students Aadhar Update At School Start June 10
TN School Students Aadhar Update At School Start June 10 தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறையானது ஆதார் புதுப்பிக்கும் பணியை பள்ளிகளிலேயே இனி மாணவர்களுக்கு செய்து தரப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது இன்று முதல் பள்ளிகளில் செய்து தரப்படும் என தெரிவித்துள்ளது.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
எனவே அதற்காக தமிழகம் முழுவதும் உள்ள இல்லம் தேடி கல்வித் திட்டத் தன்னார்வலர்களுக்கு பயிற்சிகள் வழங்கி பள்ளிக்கல்வித்துறை மற்றும் எல்காட் நிறுவனம் இணைந்து பயிற்சியை இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.
இதன் மூலமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு அவர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே ஆதார் புதுப்பிக்கும் பணியானது இன்று முதல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இதன் மூலமாக பள்ளி மாணவர்கள் தங்களுடைய ஆதாரங்களை புதுப்பித்துக் கொள்ளலாம் மற்றும் புதிதாகவும் ஆதார் எடுத்துக் கொள்ளலாம் .மேலும் கைரேகையை பதிவு செய்தல் மற்றும் அவர்களின் கருவிழிகள் பதிவு செய்தல் உள்ளிட்டவற்றையெல்லாம் இந்த ஆதார் புதுப்பித்தல் மூலமாக நாம் பள்ளிகளிலேயே புதுப்பித்துக் கொள்ளலாம்.
மாணவர்கள் பயிலும் பள்ளிகளிலேயே ஆதார் வங்கி கணக்கு பெரும் சேவைகள் இன்று முதல் தொடர்ந்து நடைபெறும் என பள்ளி கல்வித்துறை ஆனது அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் மூலமாக 2024 25 கல்வி ஆண்டில் 60 இலட்சம் மாணவர்கள் பயன்பெறுவர் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன் அரசு அரசு உதவி பெறும் பள்ளிகளில் இலவசமாகவும் தனியார் பள்ளிகளில் கட்டணத்துடனும் இந்த சேவை கிடைக்கும் என தெரிவித்துள்ளது.