வீடு கட்ட ரூ.3.50 லட்சம் கலைஞரின் கனவு இல்ல திட்டம் தமிழக அரசு புத்தம் புதிய மகிழ்ச்சி அறிவிப்பு!! Kalaignar Kanavu Illam Scheme Latest Announcement 2024

வீடு கட்ட ரூ.3.50 லட்சம் கலைஞரின் கனவு இல்ல திட்டம் தமிழக அரசு புத்தம் புதிய மகிழ்ச்சி அறிவிப்பு!!

 Kalaignar Kanavu Illam Scheme Latest Announcement 2024

 Kalaignar Kanavu Illam Scheme Latest Announcement 2024 தமிழ்நாடு அரசு தற்போது கலைஞரின் கனவு இல்ல திட்டத்தை குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதனைக் குறித்து முழு விவரத்தை கீழ்க்கண்ட பதிவில் நாம் காணலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
 Kalaignar Kanavu Illam Scheme Latest Announcement 2024
Kalaignar Kanavu Illam Scheme 3.50 Lakh Per House Announced

கலைஞர் கனவு இல்லம் இந்த திட்டம் பொறுத்த அளவில் தமிழ்நாட்டின் இலவச வீடு வழங்கும் திட்டம் என்றும் சொல்லலாம் வரும் காலகட்டத்தில் குடிசை இல்லாத தமிழ்நாடு என்ற இலக்கு. தமிழ்நாட்டின் ஏழை எளிய மக்களின் குடிசை வீட்டை கான்கிரீட் வீடாக மாற்ற இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் இந்த ஆண்டு 2024 இல் ஒரு லட்சம் வீடு கட்டப்பட உள்ளதாக தமிழக அரசு தற்சமயம் வெளியிட்ட பட்ஜெட்டில் தெரிவித்துள்ளது.

2024-2025 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டிருந்தார் .அதில் மிக முக்கியமான திட்டமான இந்த கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை தெரிவித்து இருந்தார் அதில் ஊரகப்பகுதியில் வரும் 2030க்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடு தமிழக அரசின் மூலம் கட்டித் தரப்படும் என்று தெரிவித்திருந்தார். அதற்கு ஒரு வீடு கட்டுவதற்காக மூன்று லட்சத்து 50 ஆயிரம் தமிழக அரசே நிதி வழங்குகிறது.

கலைஞரின் கனவு இல்ல திட்டம்

“குடிசை இல்லாத தமிழ்நாடு என்ற இலக்கினை அடையும் வகையில் வரும் 2030ம் ஆண்டிற்குள் தமிழகத்தின் ஊரகப்பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். முதற்கட்டமாக 2024-25ம் ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் தலா ஒவ்வொன்றும் 3.5 லட்சம் செலவில் உருவாக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளில் சொந்தமாக வீட்டு மனை இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்குவதுடன் வீடு கட்டுவதற்கான பணம் அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

அறிவியல் பூர்வமான கணக்கெடுப்பு, வெளிப்படையான தேர்வு முறை, தங்கள் கனவு இல்லங்களை தாங்களே உருவாக்கி கொள்ளும் குறிப்பிடத்தக்க அம்சங்களை தாங்கி புதிய திட்டம் கலைஞரின் கனவு இல்லம் என்ற பெயரில் வரும் நிதியாண்டில் 3500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்” என்று தங்கம் தென்னரசு அறிவித்திருந்தார்.

இந்த கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்றால் உங்கள் கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்று இதனைப் பற்றி தெளிவாக அறிய முடியும் மேலும் இந்த திட்டத்தின் தொடக்க நிலைகளை தற்சமயம் மேற்கொண்டு வருவதால் வரும் காலங்களில் இது திட்டம் மிகவும் விரைவாக செயல்பட அதிக வாய்ப்புள்ளது .மேலும் நீங்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க கண்டிப்பாக உங்கள் கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வரும் காலகட்டத்தில் விண்ணப்ப படிவம் பெற்று விண்ணப்பிக்க முடியும் .

 Kalaignar Kanavu Illam Scheme Latest Announcement 2024

ஒரு வீட்டிற்கு வழங்கப்படும் நிதி

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் நிதி மற்றும் வழிகாட்டி நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

தற்போது ஒரு லட்சம் வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வீட்டின் குறைந்தபட்ச பீடம் பகுதி சமையலறை உட்பட 360 சதுர அடியாக இருக்க வேண்டும். அதில் 300 சதுர அடி ஆர் சி சி குறையால் மூடப்பட்டிருக்கும். ஓலைகள்,அஸ்பெஸ்டாஸ்  கூரை பயன்படுத்தக் கூடாது. ஒவ்வொரு வீட்டிற்கும் ரூபாய் 3.50லட்சம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வீடு கட்ட ரூபாய் 3.50 லட்சம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கிராம ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர், உள்ளிட்டோர் அடங்கிய குழு இத்திட்டத்திற்கு தகுதியான பயனாளியை தேர்வு செய்ய வேண்டும்.

குடிசை வீடுகள் சர்வே விவரங்களை மே 31ம் தேதிக்குள் ஊரக வளர்ச்சித்துறை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்.

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் 

1. குடும்ப அட்டை (Ration Card)ரேஷன் கார்டு 

2. ஆதார் அட்டை (Aadhaar Card) ஆதார் கார்டு

3. கைபேசி எண் (Mobile Number) மொபைல் நம்பர்

4. பாஸ்போர்ட் ( Passport Size )அளவு புகைப்படம். 

5. ஜாதி சான்றிதழ் (Community Certificate) 

6. வருமானச் சான்றிதழ் (Income certificate) 

7. மின்னஞ்சல் முகவரி. 

மேலும் இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க மற்றொரு வாய்ப்பாக இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வாய்ப்பை உருவாக்கி தரவுள்ளதாக அரசு வட்டாரங்கள் தரப்பிலிருந்து தகவல் தெரிவிக்கின்றனர். அதன் மூலம் கலைஞர் கனவு இல்லம் என்ற திட்டத்தில் இணையதளத்தில் நீங்கள் விண்ணப்பிக்க முடியும்.

அதில் விண்ணப்பிக்க முதலில் அந்த இணையதளத்தை Open செய்து Apply Online ஆன்லைன் என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

அதன் பிறகு அதில் கேட்கப்படும் Basic Data உங்களுடைய பெயர் முகவரி மொபைல் நம்பர் போன்றவற்றை Enter செய்து அதன் பிறகு மேலும் சில தகவல்களை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள Submit என்ற பட்டனை கிளிக் செய்யவும்

இவ்வாறு செய்த பிறகு உங்களுடைய விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று குறுஞ்செய்தி மூலமாகவோ அல்லது இணையதளத்தின் மூலமாகவோ உங்களுக்கு தெரிவிக்கப்படும்.இது விரைவில் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Comment

error: Content is protected !!