தமிழக அரசு கலைக் கல்லூரியில் சேர கலந்தாய்வு தொடக்கம் தரவரிசை பட்டியல் வெளியீடு!!
TNGASA Counselling Start Date May 28 Tamil
TNGASA Counselling Start Date May 28 Tamil தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நாளை முதல் நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வில் கலந்து கொள்பவர்கள் ஏற்கனவே தமிழ்நாடு அரசு மற்றும் கலை கல்லூரி சேர்வதற்கான இந்த ஆண்டுக்கான விண்ணப்ப படிவத்தை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசை அடிப்படையில் இந்த கலந்தாய்வுக்கு அழைக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
அந்தந்த அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தரவரிசை பட்டியலில் தாங்கள் பெற்றிருக்கின்ற மதிப்பெண் அடிப்படையில் அந்தந்த கல்லூரிகளின் அட்டவணையில் குறிக்கப்பட்டுள்ள நாட்களில் நடைபெற இருக்கின்ற நேரடி கலந்தாய்வில் மாணவர்கள் பங்கேற்குமாறு அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.
சுற்றுவாரியாக நடைபெறும் முதல் சுற்றில் சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவினர் மாற்றுத்திறனாளிகள்,முன்னாள் ராணுவத்தினர் குழந்தைகள், அந்தமான் நிக்கோபார் தமிழ் மாணவர்கள், பாதுகாப்பு படை வீரர் வாரிசுகள்,விளையாட்டு வீரர்கள்,தேசிய மாணவர் படை மாணவர்கள் இந்த சிறப்பு ஒதுக்கீட்டில் அழைக்கப்படுவார்கள்.
கல்லூரியில் இருந்து மின்னஞ்சல் வழியாக அழைப்பு தகவல் பெற்ற தற்காலிக தேர்வு பட்டியலில் இடம் பெற்ற மாணவ மாணவியர் மட்டுமே மேற்கண்ட நேர்காணலில் நேரடியாக கலந்தாய்வில் கலந்து கொள்ள இயலும்.
காலதாமதமாக நேரடி கலந்தாய்வுக்கு வரும் மாணவ மாணவியர்கள் அந்த நேரத்தில் சென்று கொண்டிருக்கும் மதிப்பெண் அடிப்படையிலேயே சேர்க்கைக்கு அனுமதிக்க படுவார்கள்.
கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று மாற்றுச் சான்றிதழ் பெற்றுச் சென்ற மாணவ மாணவியர் மீண்டும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பெற இயலாது.
கல்லூரிக்கு விண்ணப்பித்த மாணவ மாணவியருக்கான தரவரிசை பட்டியல் கல்லூரி இணையதளத்தில் வெளியிட பெற்றிருக்கும்.
நேரில் கொண்டு வர வேண்டிய ஆவணங்கள்
1.மாற்றுச் சான்றிதழ் TC அசல் மற்றும் நகல் 2
2.10 11 12 மதிப்பெண் சான்றிதழ்கள் அசல் மற்றும் நகல் 2
3.ஜாதி சான்றிதழ் அசல் மற்றும் நகல் 2
4.ஆதார் அடையாள அட்டை அசல் மற்றும் நகல் 2
5.இணைய வழி விண்ணப்ப படிவம்
6.நிழல் படங்கள் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 2
7.சிறப்பு பிரிவினருக்கான சான்றிதழ்கள் அசல் மற்றும் நகல் 2
8.கல்வி கட்டணம்