டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் கவனத்திற்கு.. பாடத்திட்டம் மாற்றம் அறிவிப்பு வெளியீடு!! TNPSC Group 2 2A Syllabus Change Notification 2024

டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் கவனத்திற்கு.. பாடத்திட்டம் மாற்றம் அறிவிப்பு வெளியீடு!!

TNPSC Group 2 2A Syllabus Change Notification 2024

TNPSC Group 2 2A Syllabus Change Notification 2024 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி குரூப் 1 குரூப் 2 குரூப் 4 தேர்வுகளின் மூலமாக வேலை வாய்ப்பு அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக தமிழக அரசின் பல்வேறு துறைகளில் போட்டித் தேர்வுகள் ஆனது நடத்தி வருகிறது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group  Join
 Whatsapp ChannelJoin
TelegramJoin
 
TNPSC Group 2 2A Syllabus Change Notification 2024
TNPSC Group 2 2A Syllabus Change Notification 2024

 அதன் அடிப்படையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 குரூப் 2 குரூப் 4 தேர்வுகளுக்கான தேதியை கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்டது அதில் 6644 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வானது வரும் ஜூன் ஒன்பதாம் தேதி நடைபெற இருக்கிறது.

அதேபோன்று அதேபோன்று 90 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு ஜூலை 13ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

29 பணியிடங்களுக்கான குரூப் 1B மற்றும் குரூப்1செல்லம் தேர்வு ஜூலை 12ஆம் தேதி நடைபெறும் 2030 காலி பணியிடங்களுக்கான குரூப் 2 குரூப் 2a தேர்வு வரும் செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறும். அதேபோல் டிப்ளமோ ஐடிஐ அளவில் 730 பணியிடங்களுக்கான தொழில்நுட்ப பிரிவு தேர்வுகள் வரும் நவம்பர் 17ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குரூப் 2 குரூப் 2a தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தை மாற்றி உள்ளதாக தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் தற்போது அறிவித்துள்ளது.

அதில், www.tnpsc.gov.in என்ற இணையதளப் பக்கத்தில் புதிய பாடத்திட்டம் குறித்து அறிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் (முதன்மை) தேர்வு-II (குரூப் II சர்வீசஸ்), ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் (முதன்மை) தேர்வுக்கான பாடத்திட்டம் – குரூப் IIA சேவைகள் மற்றும் தேர்வுத் திட்டம் ஆகியவை கமிஷனின் இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளன.

பாடத்திட்டம்-https://tnpsc.gov.in/English/syllabus.html திட்டம்-https://tnpsc.gov.in/English/scheme.html’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுக்கு தனித்தனியே முதன்மை தேர்வு நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

error: Content is protected !!