தமிழக பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் மாற்றம்?- வெளியான முக்கிய தகவல்!! TN Summer Holiday Date Change 2024

தமிழக பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் மாற்றம்?- வெளியான முக்கிய தகவல்!!

TN Summer Holiday Date Change 2024

TN Summer Holiday Date Change 2024 தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான இறுதி ஆண்டு தேர்வு தொடர்பான அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே இதனால் கோடை விடுமுறையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதை பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
TN Summer Holiday Date Change 2024
TN Summer Holiday Date Change 2024

நாடாளுமன்ற தேர்தல் 2024 தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று 22 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடத்தப்பட உள்ளது இதனால் தேர்தல் பணிக்கு ஏதுவாக ஏப்ரல் 13ஆம் தேதி முதல் பள்ளிகள் அனைத்தும் தேர்தல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வரவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

எனவே ஏப்ரல் 12ஆம் தேதிக்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது இந்நிலையில் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ரமலான் பண்டிகை வர உள்ளதால் ஏப்ரல் 10 மற்றும் 12ஆம் தேதி நடக்க இருந்த அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தேர்வுகள் முறையே ஏப்ரல் 22 மற்றும் 23ஆம் தேதி நடக்கும் என்று பள்ளி கல்வித்துறையானது தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

.இதனால் ஏப்ரல் 13ஆம் தேதி தொடங்கவும் இருந்த கோரை விடுமுறையில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன மாணவர்கள் 22 மற்றும் 23ஆம் தேதி பள்ளிக்கு வரவேண்டிய சூழல் நிலை உள்ளதால் கோடைகால விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டு இருந்த மக்கள் தற்போது தேதி மாற்றத்தினால் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே ஏப்ரல் 24ஆம் தேதிக்கு பிறகு தான் கோடை விடுமுறையில் சுற்றுலா அல்லது சொந்த ஊர்களுக்கு செல்ல நேரிடும் என்று இத்தகவல் மூலம் தெரிகிறது. எனவே கோடை விடுமுறையானது ஏப்ரல் 24ஆம் தேதிக்கு பிறகு தான் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

error: Content is protected !!