தமிழக பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் குட் நியூஸ்-பள்ளிகள் திறப்பு தள்ளி போகலாம் வெளியான தகவல்!!
TN School Reopen Date 2024 Change Request News June 4
TN School Reopen Date 2024 Change Request News June 4 தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. கடும் வெயிலின் தாக்கத்தால் நீரிழப்பு, சோர்வு, மயக்கம், தலைச்சுற்றல், தலைவலி, வாந்தி, தசைப்பிடிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளும் ஜூன் 12-ம் தேதி திறக்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் ஜூன் 10-ம் தேதி திறக்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளி வைக்கப்படுமா?
தமிழகத்தில் முன்பாக ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கும் என்ற தெரிவித்த நிலையில் தற்போது ஜூன் 10ஆம் தேதி மாற்றப்பட்டு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அதனை மேலும் தள்ளி வைக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கைகள் எழுந்தன. இந்த நிலையில் ஓ. பன்னீர்செல்வம் பள்ளிகள் திறப்பை ஜூன் 10லிருந்து ஜூன் மூன்றாம் வாரத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். பெரும்பாலான மாநிலங்களில் ஜூன் 10 முதல் 12 பள்ளிகள் திறக்கப்படுவதால் தமிழகத்தில் இந்த தேதியின் மீது கோரிக்கைகள் வருகின்றன.
எனவே தமிழகத்தில் பள்ளிகள் திறப்பானது மீண்டும் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு அறிவிக்கப்படுமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.