பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!!..ஸ்மார்ட் போன் கட்டாயம்… மாணவர்களுக்கு குட் நியூஸ்!!
TN School Education Department Announcement Smart Phone is Compulsory 2024
TN School Education Department Announcement Smart Phone is Compulsory 2024 தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை ஆனது மாணவ மாணவிகளின் கல்வி செயல்பாடுகளில் மிகவும் அக்கறை கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது இந்த வகையில் whatsapp செயலி வாயிலாக புதிய தளம் ஒன்றை உருவாக்கி இருக்கிறது.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
இந்த தலத்துடன் மாணவ மாணவிகளின் பெற்றோரை நினைத்து அதில் கல்வித்துறை மற்றும் மாணவ மாணவிகளின் கல்வி சார்ந்த செயல்பாடுகள் குறித்து தகவல்கள் உடனுக்குடன் தெரிவிக்கப்பட உள்ளன.
இதற்காக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் கல்வி மேலாண்மை தகவல் முகமையில் (எமிஸ்) பதிவாகியிருக்கும் பெற்றோர், மாணவ-மாணவிகளின் செல்போன் எண்களை சரிபார்க்கும் பணிகளை கல்வித்துறை முடுக்கியுள்ளது.
ஸ்மார்ட் போன் கட்டாயம்
கிட்டத்தட்ட 1 கோடியே 25 லட்சம் செல்போன் எண்கள் எமிஸ் தளத்தில் இருப்பதாகவும், அதில் இதுவரை சுமார் 82 லட்சம் செல்போன் எண்கள் சரிபார்க்கப்பட்டு இருப்பதாகவும் பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.அவ்வாறு சரிபார்க்கப்பட்ட எண்கள் பள்ளிக்கல்வித்துறை கொண்டுவர உள்ள வாட்ஸ்-அப் செயலி வாயிலான புதிய தளத்தில் இணைக்கப்பட உள்ளன. இணைக்கப்பட்ட எண்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும்பட்சத்தில் அதில் இந்த புதிய தளம் செயல்பட தொடங்குகிறது.
அதன்படி, பெரும்பாலானோரின் ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்-அப் எண்ணில் ”டிபார்ட்மென்ட் ஆப் ஸ்கூல் எஜூகேஷன்” என்ற பெயரில் புதிய தளம் உருவாக்கப்பட்டு, கல்வித் துறை மற்றும் மாணவ-மாணவிகளின் கல்வி சார்ந்த செயல்பாடுகள் பதிவிடப்பட்டு வருகின்றன. ஸ்மார்ட்போன் இல்லாத பெற்றோர், குறைந்த விலையில் அதனை வாங்கி, கல்வி சார்ந்த செயல்பாடுகளை தெரிந்துகொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.