அனைவருக்கும் கிடைக்கும் மகளிர் உரிமை தொகை திட்டம்!! புதிய ரேஷன் அட்டை விநியோகம்!!
TN New Ration Cards Distribute After June 4th
TN New Ration Cards Distribute After June 4th மக்களவைத் தேர்தல் முடிவானது ஜூன் நான்காம் தேதி வெளியிடப்பட உள்ள நிலையில் தேர்தலின் காரணமாக புதிய ரேஷன் அட்டைகள் விநியோகமானது தள்ளி வைக்கப்பட்டது.எனவே இதனை தொடர்ந்து மக்களவைதேர்தல் முடிவு வெளியிடப்பட்டவுடன் புதிய ரேஷன் அட்டை விநியோகமானது தொடங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.2 லட்சம் புதிய ரேஷன் அட்டைகள் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
மகளிர் உரிமைத் தொகை ரூபாய் 1000
புதிய ரேஷன் அட்டைகள் விநியோகம் செய்யப்படுவதால் மகளிர் உரிமை தொகை விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் 34 ஆயிரத்து 793 ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. 2 கோடியே 24 லட்சத்து 16 ஆயிரத்து 478 குடும்ப அட்டைகள் உள்ளன. அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை இலவசமாகவும், சலுகை விலையிலும் ரேஷன் கடைகள் அளிப்பதால் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் வறுமை, பசி போன்ற பிரச்சினைகள் மிகக் குறைவு.
ரேஷன் அட்டைகள் மூலமாக தல நலத்திட்ட உதவிகளை தமிழக அரசானது செய்து கொண்டு வருகிறது.தமிழக அரசின் மிகச்சிறந்த திட்டமான மகளிர் உரிமைத் தொகை ரூபாய் 1000 திட்டமானது இதுவரை நன்றாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தில் இணைவதற்கு மிக முக்கிய ஆதாரமாக ரேஷன் கார்டு விளங்குகிறது.
புதிய ரேஷன் அட்டைகள் விநியோகம்
ரேஷன் அட்டையில் 21 வயது பூர்த்தி அடைந்த பெண்களுக்கு மட்டும் ரூபாய் ஆயிரம் உரிமை தொகையானது வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் இணைவதற்கு ரேஷன் அட்டை முக்கிய ஆவணமாக இருப்பதால் தற்போது புதிய ரேஷன் அட்டை தேர்தலுக்குப் பிறகு வழங்கப்படுவதால் மேலும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இணைவதற்கான விண்ணப்பங்கள் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.