பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகளில் வரவுள்ள புதிய மாற்றம்!!
TN Educational Department New Announcement For Students 2024
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
TN Educational Department New Announcement For Students 2024 பள்ளி கல்வித்துறை ஆனது அதிரடி அறிவிப்பை வெளியிட உள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி பள்ளிகள் வரும் கல்வி ஆண்டில் ஜூன் 10ஆம் தேதி திறக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ள நிலையில் பள்ளிகள் திறந்தவுடன் மூன்று புதிய அறிவிப்புகளை வெளியிட பள்ளிக்கல்வித்துறை தயார் நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பள்ளிகளில் வரவுள்ள புதிய மாற்றம்!!
இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் தமிழக அரசுடன் கலந்து ஆலோசித்து மூன்று முக்கிய அதிரடி அறிவிப்புகளை வெளியிட தயார் நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடையே போதை பொருள் பழக்கம் இருப்பதாக ஏற்கனவே அறிந்துள்ள நிலையில் பள்ளிகளுக்கு அருகில் அந்த போதைப் பொருட்கள் கிடைக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
TN Educational Department New Announcement For Students 2024
அதேபோன்று பள்ளிகள் படிக்கக்கூடிய அனைத்து மாணவர்களின் பெற்றோர்களுடைய whatsapp எண் மூலம் மாணவனுக்கு தினசரி பள்ளிகளில் தெரிவிக்கவுள்ள கருத்துகளை வாட்ஸ் அப் செய்திகள் மூலமாகவும் மாணவர்கள் வீட்டில் செய்ய வேண்டிய வீட்டுப் பாடங்கள் மற்றும் பள்ளி சார்பாக தெரிவிக்க உள்ள முக்கிய தகவல்கள் அனைத்தும் பெற்றோர்களின் whatsapp எண்ணுக்கு வழங்கப்பட உள்ளதாக அதற்காகவும் அனைத்து பெற்றோர்களின் whatsapp எண்ணானது பதிவு செய்யப்பட்டு வருகின்றது
பள்ளி மாணவர்கள் தங்கள் கைகளில் வண்ண கயிறுகள் அணிய தடை உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக ஒரு முக்கிய அதிரடி முடிவை எடுக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதன் காரணம் என்னவென்று ஆராய்ந்து பார்க்கும் போது தேன் மாவட்டங்களில் மாணவர்கள் இடையே மோதல்கள் ஏற்படும் போது மாணவர்கள் தங்கள் சமூகத்தின் அடையாளமாக வண்ண வண்ண கயிறுகள் கையில் அணிந்து அதன் மூலம் சில குறிப்பிட்ட சமூக மாணவர்களுக்கிடையே சண்டைகள் உருவாகும் சூழ்நிலை ஏற்படுகின்றது.
எனவே மாணவர்கள் தங்கள் கைகளில் வண்ண கயிறுகள் அணிய தடை உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இது தொடர்பாக தமிழக அரசுடன் கலந்து ஆலோசித்து இந்த முக்கிய முடிவை பள்ளிக் கல்வித் துறை எடுக்க உள்ளதாக தெரிகிறது. இந்த மூன்று முக்கிய அறிவிப்புகளும் பள்ளிகள் திறப்புக்கு பிறகு உடனடியாக நடைமுறைக்கு வர வாய்ப்பு உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை சார்பாக தகவல்கள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.