12ம் வகுப்புக்கு பிறகு என்ன படிப்பு படித்தால் கை நிறைய சம்பளம் வாங்கலாம் டாப் 6 படிப்புகள் எவை! After 12th Best 6 Courses in Tamilnadu

After 12th Best 6 Courses in Tamilnadu

12ம் வகுப்புக்கு பிறகு என்ன படிப்பு படித்தால் கை நிறைய சம்பளம் வாங்கலாம் டாப் 6 படிப்புகள் எவை!

After 12th Best 6 Courses in Tamilnadu பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானவுடன் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம் என்ன படிப்பு படித்தால் வாழ்க்கையில் சிறந்து விளங்கலாம் கைநிறைய பணம் சம்பாதிக்க எந்த வகையான படிப்பினை தேர்ந்தெடுக்கலாம் உள்ளிட்ட பல விவாதங்கள் ஒவ்வொரு குடும்பத்திலும் எழும் அதைப்பற்றி முழுமையாக இப்போது பார்க்கலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 

இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவிலேயே மிக குறைந்த செலவில் இந்த படிப்பை படித்தால் உடனடியாக வேலைவாய்ப்பு பெறலாம் இந்த படிப்புக்கு இந்தியா தமிழகம் மட்டுமல்லாமல் உலக அளவில் இந்த படிப்பு படித்தவர்களுக்கு பல்வேறு நிறுவனங்களில் காலி பணியிடங்கள் உள்ளது அப்படி பட்ட படிப்பு என்ன என்றால் தொழில் கல்வி டிப்ளமோ இந்த டிப்ளமோ வில் பல்வேறு பாடப்பிரிவுகள் உள்ளது.

After 12th Best 6 Courses in Tamilnadu
After 12th Best 6 Courses in Tamilnadu

டிப்ளமோ படிப்புகள்

சிவில் இன்ஜினியரிங்,  மெக்கானிக்கல் இன்ஜினியரிங், ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், எலக்ட்ரிகல் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, ஆர்ட்டிஃபிஷியல் இன்ஜினியரிங், டூலண்ட் டை மெக்கானிக்கல் இன்ஜினியரிங் &  ரெஃப்ரிஜிரேட்டர் அண்ட் ஏர் கூலர் இன்ஜினியரிங்,… என இதில் எக்கச்சக்க படிப்புகள் உள்ளன.

எந்த டிப்ளமோ படிப்பை அரசு தொழில்நுட்ப கல்லூரியிலும் இதற்கான காலி பணியிடங்கள் தமிழக அளவில் மிக அதிகமாக உள்ளது அதேபோல சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகள் அதாவது தொழில்நுட்ப கல்லூரிகளிலும் இதற்கான இடங்கள் அதிகமாக உள்ளது தற்போது இந்த படிப்பை மிகக் குறைவான மாணவர்களே படிக்கிறார்கள் என்ற நிலை உள்ளது ஆனால் இதற்கான வேலைவாய்ப்பு மிக அதிக அளவில் உள்ளது என்பதுதான் உண்மை .

இந்த படிப்பை படித்து ஒரு நிறுவனத்தில் இரண்டு மூன்று ஆண்டுகள் வேலை செய்து நிரந்தரமானால் இதில் பெறக்கூடிய சம்பளம் மிக அதிகமாக இருக்கும் மேலும் நீங்கள் படித்துக் கொண்டே அடுத்ததாக உயர்கல்வி ஆன இன்ஜினியரிங் படிப்பையும் மாணவர்கள் வேலை செய்து கொண்டே படிக்கலாம் இது தமிழகத்தில் உள்ள நடுத்தர மக்கள்  வரை மிகக் குறைந்த செலவில் படிக்கக்கூடிய படிப்பாக இது கருதப்படுகின்றது இந்த படிப்பில் முடித்தவுடன் வேலை உண்டு மேலும் இந்த படிப்பை முடித்து தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும் வேலை உண்டு என்பது கூடுதல் வரப்பிரசாதமாக கருதப்படுகின்றது.எனவே இந்த படிப்பை படிக்கலாம்.

இயற்பியல் படிப்புகள்

ட்ரெண்டிங் தொழில்களைப் பற்றி விவாதிக்கும்போது, இயற்பியல் படிப்புகள் உங்கள் நினைவுக்கே வராது. ஆனால் இதுவும் ஒரு மிக முக்கியமான துறை தான். திறமையான இயற்பியல் படிப்பு முடித்த நபர்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. அதிநவீன பொருட்கள் மற்றும் சாதனங்களை உருவாக்குவதற்கு இயற்பியல் பற்றிய விவரங்களைத் தெரிந்து இருப்பது முக்கியம். எனவே இந்த படிப்பை படிக்கலாம்.

AI தொழில்நுட்பம்

ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் (AI) மற்றும் மெஷின் லேர்னிங் (ML) ஆகியவற்றின் எழுச்சி நாம் வாழும் மற்றும் வேலை செய்யும் விதத்தை எதிர்காலத்தில் மாற்றலாம் என்று நம்பப்படுகிறது. AI தொழில்நுட்பத்தில் நல்ல வளர்ச்சி இருப்பதால் AI மற்றும் ML ஆகியவற்றைப் பயன்படுத்தத் தெரிந்த நபர்களின் தேவை அதிகரித்து வருகிறது. எனவே இந்த படிப்பை படிக்கலாம்.

ரேடியோ ஃப்ரீகுவன்சி இன்ஜினியர்கள்

வயர்லெஸ் தகவல் தொடர்பு நமது டிஜிட்டல் வாழ்க்கையின் முதுகெலும்பாக இருக்கிறது. திறமையான RF பொறியாளர்களுக்கான தேவை வேகமாக அதிகரித்து வருகிறது. ரேடியோ அலைவரிசை அமைப்புகளை வடிவமைத்தல், உருவாக்குதல் மற்றும் செயல்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும்.

இது தொலைத்தொடர்பு, செயற்கைக்கோள், ரேடார் அமைப்புகள் மற்றும் வயர்லெஸ் சென்சார் நெட்வொர்க் உள்பட பல துறைகளில் உள்ள நல்ல வாய்ப்புகளாக பார்க்கப்படுகிறது. இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IoT), 5G நெட்வொர்க்குகள் மற்றும் Wi-Fi 6 போன்ற வேலைவாய்ப்புகளை அள்ளித்தரும் என்று கூறப்படுகிறது.எனவே இந்த படிப்பை படிக்கலாம்.

எத்திகள் ஹேக்கிங் மற்றும் சைபர் செக்யூரிட்டி

ஹேக்கிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பல மோசடிகள் இன்றெல்லாம் நடந்து வருகின்றன. இதனால் ஹேக்கர்கள் எப்படி செயல்படுகின்றனர்.. மற்றும் அவர்களை கண்டுபிடிக்கும் நிபுணர்களின் தேவை அதிகரித்துள்ளது. கிரிமினல்களை பிடிப்பதற்கு போலீசாருக்கு தேவைப்படும் ஆயுதமாக ஹேக்கிங் இருக்கிறது. இதனைப் பற்றி நன்கு அறிந்தவர்களுக்கான தேவையும் தற்போது அதிகரித்துள்ளது.எனவே இந்த படிப்பை படிக்கலாம்.

சைகாலஜிஸ்ட் (Psychologist)

மனிதர்களின் மனதின் இயல்புகளை ஆராய்ந்து, அவர்களின் பிரச்சனைகளைப் புரிந்துகொண்டு, தீர்வுகளை வழங்கும் ஒரு அழகான தொழில் சைகாலஜி. நீங்கள் நன்மை செய்யும், வாழ்க்கையை மேம்படுத்தும் மற்றும் மனநலத்தை பராமரிக்கும் பணியில் ஈடுபட விரும்பினால், இது உங்களுக்கு சிறந்த தேர்வு.எனவே இந்த படிப்பை படிக்கலாம்.

இந்திய அஞ்சல் துறையில் அசத்தலான வேலைவாய்ப்பு எவ்வாறு விண்ணப்பிப்பது!- முழு விவரம்!

Latest News 

Leave a Comment

error: Content is protected !!