11ம் வகுப்பு தேர்வு முடிவு 2024 வெளியீடு எவ்வாறு பார்ப்பது Happy TN 11th Result 2024 link tamil

TN 11th Result 2024 link tamil

11ம் வகுப்பு தேர்வு முடிவு 2024 வெளியீடு எவ்வாறு பார்ப்பது

TN 11th Result 2024 link tamil : தமிழகத்தில் 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே மாதம் 14ஆம் தேதி காலை 9.30 மணிக்கு இணையதளம் வாயிலாக மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி தமிழக பள்ளிக்கல்வித்துறை ஆனது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 

ஏற்கனவே தமிழகத்தில் பொது தேர்வு முடிவுகளான 12 ஆம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகளை தமிழக அரசு சார்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த பதினோராம் வகுப்பு மாணவர்கள் தமிழக அரசின் பாடத்திட்டத்தின் படி படித்துள்ள சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழக அரசின் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் அரசு சிறப்பு பள்ளி மற்றும் சுயநிதி பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவானது இன்று வெளியாகிறது.

இந்த தேர்வு முடிவுகளை மாணவர்கள் எவ்வாறு பார்க்கலாம் என்பது தொடர்பாக எந்த அறிவிப்பில் நாம் முழுமையாக பார்க்க உள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது இது போன்ற பயனுள்ள தகவல்களை தொடந்து பெற நமது வாட்ஸ் அப் குழுவில் இணைவோம்.

TN 11th Result 2024 link tamil
TN 11th Result 2024 link tamil

 

11th Result 2024 Tamil nadu 

11 ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 4ம் தேதி முதல் 25ம் தேதி வரையிலும் 3 ஆயிரத்து 302 மையங்களில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 7 ஆயிரத்து 534 மேல்நிலைப் பள்ளிகளில் படித்த மாணவர்கள், தனித்தேர்வர்கள் என 8 லட்சத்து 25 ஆயிரத்து 187 பேர் எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் தனித்தேர்வர்களாக 4 ஆயிரத்து 945 பேரும் எழுத அனுமதி அளிக்கப்பட்டது. அவர்களில், சிறைவாசிகள் 187 பேரும் அடங்குவர். சென்னை மாவட்டத்தில் உள்ள 591 பள்ளிகளில் படிக்கும் 65 ஆயிரத்து 852 மாணவர்கள் 240 மையங்களில் தேர்வினை எழுத அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்து தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கு தயார் நிலையில் உள்ளது. அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள அறிவிப்பில், 11 ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் மே 14ம் தேதி காலை 9.30 மணிக்கு பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்குனர் அலுவலகத்தில் வெளியிடப்படுகிறது.

தேர்வர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, https://results.digilocker.gov.in என்ற இணையதளங்களில் பதிவு எண் மற்றும் பிறந்தத்தேதியை பதிவு செய்து தெரிந்துக் கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கும் போது அளித்த செல்போன் எண்களுக்கும் தேர்வு முடிவுகள் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Tamilnadu 11th Result 2024 Date Time

மார்ச் 2024 இல் நடைபெற்ற 2023-24-ஆம் கல்வி ஆண்டுக்கான மேல்நிலை இரண்டாம் ஆண்டு பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள் மே 14ஆம் தேதி  பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசு தேர்வுகள் இயக்கத்தில் காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.

Tamilnadu 11th Result 2024 

மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை பின்வரும் இணையதள முகவரி மூலம் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் தங்கள் பதிவின் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் நேஷனல் இன்ஃபர்மேஷன் சென்டர்ஸ் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என எந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tamil nadu 11th Result 2024 Link

அதிகாரப்பூர்வ இணையதள முகவரி : 

  1. tnresults.nic.in
  2. dge.tn.gov.in

மேற்கண்ட இந்த இரண்டு அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் தேர்வு முடிவுகளை மாணவர்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TN 11th Result 2024 link tamil
TN 11th Result 2024 link tamil

தமிழகத்தில்  11ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுக்காக காத்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் மே 14ஆம் தேதி மாணவர்களின் தேர்வு முடிவுகளை காலை 9.30 மணிக்கு தெரிந்து கொள்ள தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

11-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை பார்ப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்

step by step

1. மாணவர்கள் மேற்குறிப்பிட்டுள்ள இணையதள முகவரிக்கு செல்ல வேண்டும்.
2. மாணவர்கள் தங்கள் பதிவு எண் ரோல் நம்பர் பதிவு செய்ய வேண்டும்.
3. மாணவர்கள் தங்கள் பிறந்த தேதியினை பதிவு செய்ய வேண்டும் DD/MM/YYYY.
4. கெட் மார்க்ஸ் என்ற பட்டனை அழுத்த வேண்டும்.
5. மாணவர்கள் தங்கள் பெற்ற மதிப்பெண்களை திரையில் பார்க்கலாம்.
6. மேலும் தேவைப்படும் மாணவர்கள் அதனை ஒளி பிரதி எடுத்துக் கொள்ளலாம் PRINT.

தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம் மேலும் 11ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம் உள்ளிட்ட முக்கிய தகவல் அனைத்தையும் நமது இணையதளத்தில் வெளியிட்டுள்ளோம் அதை நமது இணையதள பக்கத்தில் சென்று பார்வையிடலாம். 

Home Page

Click

Leave a Comment

error: Content is protected !!