விவசாயிகளுக்கு ரூ.15,000 வழங்கப்படும்..யாருக்கு கிடைக்கும்? -தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் திட்டம்! Tamilnadu Agricultural Budget 2025

விவசாயிகளுக்கு ரூ.15,000 வழங்கப்படும்..யாருக்கு கிடைக்கும்? -தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் திட்டம்!

Tamilnadu Agricultural Budget 2025

Tamilnadu Agricultural Budget 2025 பயிர் உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுக்கு ரூ.15 ஆயிரம் மானியம் வழங்கும் தமிழ்நாடு அரசின் திட்டம் குறித்து இங்கு விரிவாக காணலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group  Join
 Whatsapp ChannelJoin
TelegramJoin
 
Tamilnadu Agricultural Budget 2025
Tamilnadu Agricultural Budget 2025

Tamil Nadu Government Scheme For Farmers: தமிழ்நாடு அரசு வரும் மார்ச் 14ஆம் தேதி 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் (Tamil Nadu Budget 2025) சட்டப்பேரவையில் செய்ய உள்ளது. அதைத் தொடர்ந்து, வரும் மார்ச் 15ஆம் தேதி அன்றே வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் (Tamilnadu Agricultural Budget 2025) செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெண்கள், முதியோர், விவசாயிகள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கக் கூடிய பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு (Tamil Nadu Government) செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள திட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.15 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதுவரை இந்த திட்டம் குறித்த அறியாதவர்கள், இதனை தெரிந்துகொண்டு விவசாய மக்கள் பயன்பெற உதவுங்கள்.

பயிர் உற்பத்தியை அதிகரிக்கவும், நிலத்தடி நீர்ப் பாசனத்தில் மின்மோட்டார் பம்பு செட்டு அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு மானியம் வழங்குகிறது.

விவசாயிகள் புதிய 4 நட்சத்திர தரத்திலான மின் மோட்டார் பம்பு செட்டை வாங்க ரூ.15 ஆயிரம் வழங்கப்படும். இல்லையெனில், மொத்த பம்பு செட் விலையில் 50% மானியமாக வழங்கப்படும்.

மின்சாரா வாரியம் மூலம் அனுமதிக்கப்பட்ட குதிரைத்திறன், இல்லையெனில் அதற்கும் குறைவான குதிரைத்திறன் கொண்ட பம்பு செட்டுகளை வாங்கவும் மானியம் கிடைக்கும்.

புதிதாக உருவாக்கப்பட்ட கிணறுக்களுக்கும், பழைய பம்பு செட்டுகளுக்கும், புதிய 4 நட்சத்திரம் தரத்திலான மின்சார மோட்டார் பம்பு செட்டுகளுக்கும் மானியம் வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் கீழ் ரூ.15 ஆயிரம் மானியம், 5 ஏக்கர் வரை நிலம் கொண்ட விவசாயிகளுக்கே வழங்கப்படும். மேலும், தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமை மூலம் நுண்ணீர்ப்பாசனம் நிறுவிய விவசாயிகளுக்கும், நிறுவ விருப்பம் உள்ள விவசாயிகளுக்கு மட்டும் இந்த மானியத்தை பெரும் தகுதி உள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மேலும், வரும் தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டில் (Tamilnadu Agricultural Budget 2025) விவசாயிகளுக்கு மேலும் பல புதிய திட்டங்களும், மானிய அறிவிப்புகளும் வெளியிடப்படலாம். 

Leave a Comment

error: Content is protected !!