ரெடியா இருங்க.. அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1000.! துணை முதல்வர் உதயநிதி சொன்ன சூப்பர் தகவல் Magalir Urimai Thogai March 2025 Tamil Nadu Good News

Magalir Urimai Thogai March 2025 Tamil Nadu

Magalir Urimai Thogai March 2025 Tamil Nadu 2026 சட்டமன்ற தேர்தலுக்கு திமுக தயாராகி வருகிறது. தற்போது தமிழகத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான மகளிருக்கு மகளிர் உரிமைத்தொகை மாதம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பலருக்கு வழங்கப்படாததால் அதிருப்தி எழுந்துள்ளது. இந்த நிலையில் மே மாதத்திலிருந்து அனைத்து மகளிருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. அதனை உறுதி செய்வதுபோல பேசியிருக்கிறார் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஆன உதயநிதி ஸ்டாலின். மேலும் பட்ஜெட் தாக்கலின் போது இந்த அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

 

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group  Join
 Whatsapp ChannelJoin
TelegramJoin
 
Magalir Urimai Thogai March 2025 Tamil Nadu
Magalir Urimai Thogai March 2025 Tamil Nadu

 

திமுக தலைவராக முதன்முறையாக தேர்தலைச் சந்தித்த மு.க.ஸ்டாலின் வெற்றி பெற முக்கிய காரணம், அவர் அறிவித்த மகளிருக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட மகளிர் உரிமைத் தொகை திட்டம் தான்.

 

தமிழகம் முழுவதும் பெரிய அளவில் இந்த திட்டம் பேசப்பட்டது. ஏன் இந்தியா முழுமைக்குமே முன்னோடி திட்டமாக இது கருதப்பட்டது. இதேபோல் அதிமுகவும் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கும் என அறிவித்தது.

 

 எதிர்பார்த்தது போல திமுக பெருவெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. தொடர்ந்து மகளிர் உரிமைத்துறை திட்டத்தில் சுமார் ஒரு கோடியே 16 லட்சம் பயனாளிகள் பயன்பெற்றனர். மேலும் புதிதாக திருமணமானவர்கள், புதிய குடும்ப அட்டை பெற்றவர்கள், கல்லூரி படிப்பை முடித்தவர்கள் என மாதம் தோறும் ஆயிரக்கணக்கில் மகளிர் உரிமைத்தொகைக்காக புதிய விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு மாதமும் கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கான பட்டியல் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அரசின் விதிமுறைகள் பொருந்தாததால் தற்போது சுமார் ஒரு லட்சத்து 27 ஆயிரம் பயணிகள் உரிமை தொகை திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளின் எண்ணிக்கை ஒரு கோடியே 15 லட்சத்திலிருந்து ஒரு கோடியே 14 இலட்சமாக குறைந்து இருக்கிறது. இந்நிலையில் மகளிர் உரிமைத்தொகை பெற்று நீக்கப்பட்டவர்களும், இதுவரை மகளிர் உரிமைத்தொகை பெறாதவர்களும் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் மகளிர்க்கு இருக்கும் அதிருப்தியை சமாளிக்கும் வகையில் அனைத்து மகளிருக்கும் அதாவது குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மகளிர் உதவித்தொகை வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டு இருக்கிறது. வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் இதற்கான அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு தான் முதன் முதலில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை கொண்டு வந்தது. அதற்கு பிறகு இந்தியாவின் பல மாநிலங்களில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

மகளிர் உரிமைத்தொகை

அங்கு சுமார் 2000 ரூபாய் வரை வழங்கப்படும் நிலையில் தமிழகத்தில் மட்டுமே ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. எனவே இந்த தொகை உயர்த்தி வழங்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை மற்றும் உரிமைத்தொகை 1500 ரூபாயாக உயர்வு என்ற அறிவிப்பு இருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் அதனை உறுதி செய்வதுபோல பேசியிருக்கிறார் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். சென்னை தென்மேற்கு மாவட்ட திமுக சார்பில் பாக முகவர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த மகளிர் உள்ளிட்ட ஐந்தாயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மயிலாப்பூரில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு இன்னும் இரண்டு மாதங்களில் ஆயிரம் ரூபாய் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என பேசினார். இதன் மூலம் பட்ஜெட் கூட்டத்தொடரில் அனைத்து மகளிர்க்கும் உதவித்தொகை என்ற அறிவிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Apply Link
TN Daily News Link

Leave a Comment

error: Content is protected !!