PM கிஷான் 17வது தவணை எப்போது? முக்கிய தகவல் வெளியீடு!!
PM Kisan 17th Installment Deposit Date Update
PM Kisan 17th Installment Deposit Date Update PM கிஷான் என்று சொல்லப்படுகின்ற பிரதான் மந்திரி கிஷான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கத்தோடு மத்திய அரசால் அமல்படுத்தப்பட்ட முக்கிய திட்டமான இத்திட்டத்தின் மூலம் ரூபாய் 2000 ஆனது வருடத்திற்கு 6000 என மொத்தம் மூன்று தவணையாக ரூபாய் 2000 ஆக வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
எனவே இந்த பணத்தை விவசாயிகள் மானிய விலையில் விவசாயத்திற்கு தேவையான பொருள்களை வாங்கிக் கொள்ளலாம். மேலும் இதுவரை 11 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூபாய் 2.61 லட்சம் கோடிக்கு மேல் சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த திட்டத்தில் இரண்டு ஹெக்ட்டரருக்கும் மேல் நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளும் பயன்பெற முடியும் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். 16-வது தவணையானது பிப்ரவரி 28ஆம் தேதி விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நிலையில் தற்போது 17வது தவணை எப்போது வரும் என்று விவசாயிகள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இத்திட்டம் பிரதான் மந்திரி கிஷான் நிதி யோஜனா நான்கு மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது.
தற்போது 17 வது தவணை எப்பொழுது என்று விவசாயிகள் கேள்வி எழுப்பி வருகின்ற நிலையில் கடைசி 16-வது தவணை பிப்ரவரியில் இருந்து கணக்கிட்டால் வரும் ஜூன் மாதத்தில் 17வது தவணை வெளியாக வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தேர்தல் விதிமுறைகள் காரணமாக இந்த முறை பி எம் கிசான் தவணையானது செலுத்தும் தேதி தாமதமாகலாம் என்று தகவல்கள் கசிந்துள்ளது.
அதுமட்டுமின்றி இ கே ஒய் சி அப்டேட் செய்யப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் சிலருக்கு 16வது தவணை பணமே இன்னும் கிடைக்காமல் உள்ளது எனவே ஏதாவது திட்டத்தில் இடர்பாடுகள் இருந்தால் இந்த ஹெல்ப்லைன் என்னை அழைத்து புகார் அளியுங்கள். அது மட்டும் இன்றி பி எம் கிஷான் கட்டணமில்லா எண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தை குறித்து இந்த அலைபேசி எண்ணை உபயோகித்து விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.
Helpline : 18001155266, 155261
Email ID :pmkisan-ict@gov.in
மேலும் இத்திட்டத்தில் விவசாயிகள் சரியான முறையில் பணத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றால் முக்கியமாக கேஒய்சி முடிப்பது கட்டாயமாகும் .அப்படி செய்யாதவர்கள் உடனே செய்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் கீழே உள்ள இணையதள ஐடியும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.