பெண்களுக்கு மாதம் ரூ.2500 விண்ணப்பிப்பது எப்படி?- முழு விவரம் இதோ!
Mahila Sammiridhi Yojana Scheme Details
Mahila Sammiridhi Yojana Scheme Details : மத்திய அரசு மற்றும் பல்வேறு மாநில அரசுகள் பெண்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களையும், முன்னெடுப்புகளையும் செயல்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, பல்வேறு மாநில அரசுகள் பெண்கள் முன்னேற்றங்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |

- இத்திட்டத்திற்கு வரும் மார்ச் 8 முதல் விண்ணப்பிக்கலாம்.
- இணையதளத்தில் இத்திட்டத்திற்கு விண்ணபிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
- இத்திட்டத்தில் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கிடைக்கும்.
Mahila Sammiridhi Yojana: பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500
அந்த வகையில், தற்போது டெல்ல அரசும் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 கொடுக்கும் மகிளா சம்ரித்தி யோஜனா (Mahila Sammiridhi Yojana) திட்டத்தை வரும் மார்ச் 8ஆம் தேதி முதல் தொடங்கிவைக்க இருக்கிறது. அதாவது, பொருளாதார பின்தங்கிய மகளிருக்கு இந்த திட்டத்தின் மூலம் மாதம் ரூ.2,500 கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Mahila Sammiridhi Yojana: மார்ச் 8 முதல் விண்ணப்பிக்கலாம்
இதுகுறித்து பாஜக எம்.பி., மனோத் திவாரி கூறுகையில்,”மகிளா சம்ரித்தி யோஜனா திட்டத்திற்கு வரும் மார்ச் 8ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தில் தகுதியான நபர்கள் அவர்களுடைய வங்கிக் கணக்கிலேயே மாதந்தோறும் ஊக்கத்தொகையை பெறுவார்கள் என தெரிவித்தார்.
Mahila Sammiridhi Yojana: இத்திட்டத்தில் பயனாளராக சேர்வதற்கான தகுதி
பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள் தங்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும், சுதந்திரமாக செயல்படவும், இந்த ரூ.2,500 ஊக்கத்தொகை வழிவகுக்கும் என்ற நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது. ஆட்சிக்கு வந்தால் ரூ.2,500 ஊக்கத்தொகையை பெண்களுக்கு மாதந்தோறும் அளிப்போம் என பாஜக அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அந்த வகையில், இத்திட்டத்தில் சேர்வதற்கான தகுதிகள் என்னென்ன, விண்ணப்பிப்பது எப்படி, விண்ணப்பிப்பதற்கு தேவையான ஆவணங்களை இங்கு காணலாம்.
மகிளா சம்ரித்தி யோஜனா திட்டத்தில் பயன்பெற பயனாளர் இந்திய குடிமகளாக இருக்க வேண்டும். டெல்லியின் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். 18 வயதை அடைந்தவர்களுக்கே இத்திட்டத்தின் பலன் கிடைக்கும். மேலும், பயனாளர்களுக்கு வங்கிக் கணக்கும் முக்கியம்.
Mahila Sammiridhi Yojana: என்ன ஆவணங்கள் தேவை?
மகிளா சம்ரித்தி யோஜனா திட்டத்திற்கு விண்ணப்பிக்க அடையாளச் சான்றாக ஆதார் கார்டு, பொருளாதார நிலையை அறிய ரேஷன் கார்டு, முகவரி சான்றாக வாக்காளர் அட்டையோ அல்லது மின்சார கட்டண பில் ஆகியவற்றை சமர்பிக்கலாம். OTP சரிபார்ப்பு மற்றும் பிற அப்டேட்களுக்காக வங்கிக்கணக்கில் பதிவு செய்யப்பட் மொபைல் எண் தேவையாகும்.
Mahila Sammiridhi Yojana: விண்ணப்பிப்பது எப்படி?
மகிளா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்கு சென்று அதில் Register என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பெயர், ஆதார் அட்டை எண், வங்கி கணக்கு விவரம் உள்ளிட்ட தேவைப்படும் அனைத்து விவரங்களையும் உள்ளிட வேண்டும். மேலும், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, முகவரி சான்று ஆகியவற்றை பதிவிட வேண்டும். அதன்பின் Submit என்பதை கிளிக் செய்து அதனை விண்ணப்பிக்கும் செயல்முறையை நிறைவு செய்ய வேண்டும்.
Mahila Sammiridhi Yojana: மகளிர் தினத்தில் தொடக்கம்
டெல்லியில் பாஜக ஆட்சி அமைத்து ஒரு மாதத்திற்குள்ளாகவே இத்திட்டம் அமல்படுத்தப்படுவது கவனிக்கத்தக்கது. சுமார் 5 ஆயிரம் பெண்கள் பங்கேற்கும் மகளிர் தின நிகழ்ச்சியில் மத்திய அமைச்சரும், பாஜக தேசிய தலைவருமான ஜே.பி. நட்டா மற்றும் டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்ச்சியில்தான் மகிளா சம்ரித்தி யோஜனா திட்டம் தொடங்கிவைக்கப்பட இருக்கிறது.
Mahila Sammiridhi Yojana: பெண்களுக்கான திட்டங்கள்
இதேபோல் பல்வேறு மாநிலங்களில் பெண்களுக்கான பல ஊக்கத்தொகை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஒடிசாவில் ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாயை இரண்டு தவணைகளாக வழங்கும் சுபத்ரா திட்டம் (Subhadra Scheme), தமிழ்நாட்டில் மாதந்தோறும் 1000 ரூபாய் என ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டமும் (Kalaignar Magalir Urimai Thogai) செயல்படுத்தப்பட்டு வருகிறது. கர்நாடாக, மகாராஷ்டிராவிலும் இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.