நாடாளுமன்ற தேர்தல் தேதி 2024 -இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
Loksabha Election Date Announce 2024
Loksabha Election Date Announce 2024 ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிப்பு குறித்து இன்று மதியம் மூன்று மணி அளவில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜுவ் குமார் அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் தகவல்களை தெரிவித்துள்ளார்.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
நாடாளுமன்றத்தின் மக்களவை பதவிக்காலம் ஆனது வரும் ஜூன் பதினாறாம் தேதியுடன் முடிவடையும் நிலையில் இதற்கு முன்பாகவே மக்களவைத் தேர்தலை நடத்திவிட வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் மார்ச் 16ஆம் தேதி ஆன இன்று இந்திய தேர்தல் தலைமை ஆணையர் ராஜுவ் குமார் அவர்கள் தேர்தல் தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் நாட்டில் உள்ள மொத்தம் 96.8 கோடி வாக்காளர்களில் 49.7 கோடி பேர் ஆண்களும் 47. 1 கோடி பேர் பெண்களும் என்று தெரிவித்துள்ளார் மேலும் 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்களை வீட்டிலிருந்தே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் 2.18 லட்சம் வாக்காளர்கள் 100 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தேர்தலில் கடைப்பிடிக்கப்படுகின்ற விதிமுறைகள் மற்றும் வரைமுறைகளை குறித்து அறிவுறுத்தல்களையும் அவர் தெரிவித்துள்ளார் மக்களவைத் தேர்தல் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் விதிகள் முழுவதும் என்று அமலுக்கு வந்துள்ளது. மேலும் 26 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் நடத்தப்படும் தேதியை குறித்தும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடத்தப்படும்.முதல் கட்ட தேர்தல் ஆனது ஏப்ரல் 19ஆம் தேதியில் தமிழக முழுவதும் ஒரே கட்டமாக நடைபெறும் என்றும் வேட்பு மனு தாக்கல் மார்ச் 20ஆம் தேதி தொடங்கப்படும் எனவும் ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவானது ஏப்ரல் 26 ஆம் தேதியும் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவானது மே ஏழாம் தேதியும் நான்காம் கட்ட வாக்குப்பதிவானது மே 13ஆம் தேதியும் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவானது மே இருபதாம் தேதியும் ஆறாம் கட்ட வாக்குப்பதிவானது மே 25ஆம் தேதியும் ஏழாம் கட்ட வாக்குப்பதிவானது ஜூன் ஒன்றாம் தேதியும் நடத்தப்படும் என அவர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெரிவித்துள்ளார்.