ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடனை பெற வேண்டுமா? மத்திய அரசின் சூப்பர் திட்டம்!! விண்ணப்பிக்கும் முறை.. Lakpathi Yojana Didi Scheme Apply Details In Tamil

ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடனை பெற வேண்டுமா? மத்திய அரசின் சூப்பர் திட்டம்!! விண்ணப்பிக்கும் முறை..

Lakpathi Yojana Didi Scheme Apply Details In Tamil

Lakpathi Yojana Didi Scheme Apply Details In Tamil ரூபாய் 5 லட்சம் வரை வட்டி இல்லா கடனை வழங்கும் ஒரு புதிய திட்டத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இத்திட்டமானது பெண்களுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் பற்றிய முக்கிய அறிவிப்புகளையும் மற்றும் திட்டத்திற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்த முழு தகவல்களையும் நாம் கீழ்கண்டவற்றுள் காணலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group  Join
 Whatsapp ChannelJoin
TelegramJoin
 
Lakpathi Yojana Didi Scheme Apply Details In Tamil
Lakpathi Yojana Didi Scheme Apply Details In Tamil

நாடு முழுவதும் சுயதொழில் செய்து மக்கள் இன்புற்று வாழ வேண்டும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு துவங்கப்பட்டது இத்திட்டமாகும். இத்திட்டத்தின் பெயர் லக்பதி யோஜனா திதி என்று அழைக்கப்படுகிறது.

இத்திட்டத்தின் வாயிலாக நாடு முழுவதும் உள்ள மூன்று கோடி பெண்களை சுய தொழில் செய்பவர்களாக மாற்றுவதே நோக்கமாகும்.இத்திட்டம் பெண்களுக்கு ஒரு அருமையான திட்டமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த லக்பதி யோஜனா திதி திட்டத்தின் மூலமாக ரூபாய் 5 லட்சம் வரை வட்டி இல்லா கடன் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்திய நாட்டில் 83 லட்சம் சுய உதவி சங்கங்கள் உள்ளன. அவற்றில் ஒன்பது கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் அங்கம் வகித்து வருகின்றனர். எனவே இத்திட்டத்தின் வாயிலாக பெண்கள் ரூபாய் 1லட்சம் முதல் 5 லட்சம் வரை கடன் வாங்கலாம்.

Lakpathi Yojana Didi Scheme Apply Details In Tamil

லக்பதி யோஜனா திதி திட்டத்தின் மூலமாக நாம் எவ்வாறு கடன் பெறுவது 

இத்திட்டத்தை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும் என்றால் லக்பதி யோஜனா திதி என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். இதுவே நாம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்றால் அதற்கு சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

லக்பதி யோஜனா திதி திட்டத்திற்கு தேவையான ஆவணங்கள்

  • ஆதார் கார்டு
  • ரேஷன் கார்டு
  • வங்கி கணக்கு புத்தகம் 
  • சுய உதவிக் குழு உறுப்பினர் சான்றிதழ் உள்ள ஆவணங்கள் கட்டாயம் என்று கூறப்பட்டுள்ளது.

எனவே இத்திட்டத்தில் விண்ணப்பித்து வட்டி இல்லா கடனை பெற்று வாழ்க்கையில் முன்னேறுங்கள். மத்திய அரசின் இந்த திட்டம் அனைவருக்கும் கொண்டு போய் சேர்க்க இப்பதிவு அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Comment

error: Content is protected !!