தமிழக இலவச தையல் இயந்திரத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?- முழு விபரம் இதோ!
How To Free Sewing Machine Apply
How To Free Sewing Machine Apply : தமிழ்நாடு அரசு பொதுவாக பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில், குறிப்பாக ‘சத்தியவாணி முத்து அம்மையார்’ திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ‘இலவச தையல் மிஷின்’ ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |

அதாவது, இத்திட்டத்தின் கீழ் விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பொருளாதாரத்தில் நலிவுற்ற பெண்கள் ஆகியோருக்கு இலவச தையல் மிஷின் வழங்கப்படுகிறது.
மேலும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72,000 க்குள் இருக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த பெண்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். அதேபோல், விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற தையல் பயிற்சி நிறுவனத்தில் குறைந்தது 6 மாத காலம் தையல் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
மேலும், கல்வி சான்று, சாதி சான்று, புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை போன்றவற்றுடன் அருகில் உள்ள அரசு இ – சேவை மையத்தின் மூலம் இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயனடையலாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.