தமிழக பள்ளிகளில் கொண்டு வந்த புதிய வசதி இனி எல்லாமே தெரிஞ்சுக்கலாம்..பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!!
Helpline Facility For TN Govt School Admission
Helpline Facility For TN Govt School Admission தமிழகத்தில் தேர்வுகள் நடைபெற்ற முடிந்த நிலையில் தற்போது அடுத்த கல்வியாண்டு காண பள்ளி மாணவர் சேர்க்கையானது நடைபெற்றுக் கொண்டு வருகிறது. எனவே பள்ளி கல்வித்துறை ஆனது அரசு பள்ளிகளில் அதிக மாணவர்களை சேர்க்க வேண்டும் என்ற நோக்கில் பல புதிய நடைமுறைகளை கொண்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக தற்போது ஹெல்ப்லைன் வசதி போன்ற அனைத்து வசதிகளையும் பெற்றோர்களுக்கு ஏற்படுத்தி உள்ளது.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
வருகின்ற 2024- 25 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையானது தேர்தல் பணிகளின் காரணமாக முன்கூட்டியே தொடங்கப்பட்டுள்ளது .இதுவரை மட்டும் மூன்று லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இந்த ஆண்டு சேர்க்கப்பட்டுள்ளனர் .மேலும் 5.5 லட்சம் மாணவர்களை சேர்க்க வேண்டும் என்பது இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஆசிரியர்களே மாணவர்களின் வீடுகளுக்கு சென்று பள்ளிக் கல்வித் துறை கொண்டு வந்த தற்போதைய மாற்றங்கள் மற்றும் டிஜிட்டல் வகுப்புகள் ஆங்கில வழி பாடங்கள் என பலதரப்பட்ட முயற்சிகளையும் தீவிரமான செயல்பாடுகளையும் பெற்றோர்களுக்கு எடுத்துக்கூறி தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க முயற்சி பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.
மேலும் இதில் குறிப்பாக சேலம், கள்ளக்குறிச்சி ,மதுரை ஆகிய மாவட்டங்களில் அதிகப்படியான மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது, குறைவாக சேர்க்கப்பட்ட இடங்கள் நீலகிரி ,நாகப்பட்டினம் ,மயிலாடுதுறை ,பெரம்பலூர், காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் மாணவர்கள் குறைவாக சேர்ந்துள்ளனர் .இதற்கு காரணம் என்னவென்று கேட்டால் பல பெற்றோர்களுக்கு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதே தெரியவில்லை. மேலும் அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி முறை எங்கெங்கு உள்ளது பற்றிய விவரங்களும் மற்றும் மாணவர்களை சேர்க்க தேவையான ஆவணங்களை பற்றி விவரங்களும் சில ஆசிரியர்கள் பெற்றோருக்கு தெரிவிக்கவில்லை என்று தெரியவந்தது.
இதனால் ஹெல்ப்லைன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்த ஹெல்ப்லைன் வசதி கடந்த பத்து நாட்களில் மட்டும் 40 ஆயிரம் பெற்றோர்கள் தொடர்பு கொண்டு தங்கள் சந்தேகங்களை தீர்த்து வைத்துள்ளது. இந்த தொடர் நடவடிக்கைகளால் இந்த ஆண்டு அதிகமான மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்க்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்.