ஏடிஎம் கட்டணம் திடீர் உயர்வு..! ATM fees suddenly increase

ஏடிஎம் கட்டணம் திடீர் உயர்வு..!

ATM fees suddenly increase

ATM fees suddenly increase: இந்திய ரிசர்வ் வங்கி ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்களை மாற்றியமைத்து புதிய கட்டணங்களை அறிவித்துள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group  Join
 Whatsapp ChannelJoin
TelegramJoin
 

இந்த மாற்றம், மே மாதம் 1ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது. இந்த மாற்றத்தின் மூலம் நிதி பரிவர்த்தனைகளான ஏடிஎம்-ல் இருந்து பணம் எடுப்பதற்கு இரண்டு ரூபாய் கூடுதலாகவும், நிதி அல்லாத பரிவர்த்தனைகளான கணக்கு இருப்பை சரிபார்ப்பது போன்றவற்றுக்கு ஒரு ரூபாய் கூடுதலாகவும் கட்டணம் வசூலிக்கப்படும்.

ATM fees suddenly increase
ATM fees suddenly increase

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் யுபிஐ சேவைகளை அதிகளவில் பயன்படுத்தி வந்தாலும் ரொக்க பணம் பல நேரத்தில் பல தருணங்களில் தேவைப்படுகிறது. இப்போதெல்லாம் நமக்கு கைக்கொடுப்பது ஏடிஎம் இயந்திரங்கள் தான். இந்த நிலையில் ஏடிஎம் கட்டணங்கள் உயர்த்திருப்பது மக்களுக்கு புதிய சுமையாக மாறியுள்ளது.

ATM fees suddenly increase

தற்போது, மெட்ரோ நகரங்களில் வசிக்கும் வங்கி வாடிக்கையாளர்கள், தங்கள் வங்கியைத் தவிர மற்ற வங்கிகளின் ஏடிஎம்களைப் பயன்படுத்தும் போது மாதத்திற்கு ஐந்து முறை இலவசமாக பயன்படுத்திக்கொள்ள முடியும். 

அதே நேரத்தில், மெட்ரோ அல்லாத பகுதிகளில் வசிப்பவர்களுக்கு மாதத்திற்கு மூன்று முறை இலவச பரிவர்த்தனைகள் செய்துக்கொள்ள முடியும். இந்த விதிமுறையில் எவ்விதமான மாற்றமுமில்லை.இந்த புதிய மாற்றத்தின் மூலம், குறைவான ஏடிஎம் நெட்வொர்க்குகளைக் கொண்ட சிறிய வங்கிகளை அதிகமாக பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், மக்கள் தங்களுடைய சொந்த வங்கி ஏடிஎம்-களை தாண்டி பிற வங்கிகளின் ஏடிஎம்களை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும்.மேலும் இப்புதிய கட்டணங்களை எப்படி, எப்போது வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கும் என்பது குறித்து வங்கிகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

கடந்த பத்து ஆண்டுகளில், இடைமாற்றுக் கட்டணங்கள் அதாவது interchange fees திருத்தப்பட்டபோது எல்லாம், வங்கிகள் இந்த கட்டணத்தை வாடிக்கையாளர்களிடம் இருந்து தான் வாங்கியது.

இதேபோல் தான் இந்த முறையும் கட்டணங்களை வாடிக்கையாளர் தலையில் விதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஏடிஎம் interchange fees என்பது ஒரு வங்கி, மற்றொரு வங்கியின் ஏடிஎம் சேவைகளைப் பயன்படுத்தும் போது செலுத்தப்படும் கட்டணமாகும். இந்த கட்டணம், வழக்கமாக பரிவர்த்தனையில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை கணக்கிடப்பட்டு, வாடிக்கையாளரின் மொத்த கட்டணத்துடன் சேர்க்கப்படுகிறது.

ஆதாவது எஸ்பிஐ வாடிக்கையாளர் ஐசிஐசிஐ ஏடிஎம் பயன்படுத்தும் போது கொடுக்கப்படும் கட்டணம்.ஆர்பிஐ கடைசியாக இந்த interchange கட்டணத்தை த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மாற்றியது, அதை தொடர்ந்து தற்போது மீண்டும் அமல்படுத்தப்படுகிறது.

இப்புதிய மாற்றத்தின் படி பணம் எடுப்பது போன்ற நிதி பரிவர்த்தனைகளுக்கான interchange fees 17 ரூபாயிலிருந்து 19 ரூபாயாக அதிகரிக்கும். அதே நேரத்தில், கணக்கு இருப்பை சரிபார்ப்பது போன்ற நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கான கட்டணம் 6 ரூபாயிலிருந்து 7 ரூபாயாக உயரும்

Leave a Comment

error: Content is protected !!