சனிப்பெயர்ச்சியும் சனி அமாவாசையும் துன்பம் நீங்கி இன்பம் பெற.. Sani Amavasai March 29 Full Details Tamil

சனிப்பெயர்ச்சியும் சனி அமாவாசையும் துன்பம் நீங்கி இன்பம் பெற..

Sani Amavasai March 29 Full Details Tamil

Sani Amavasai March 29 Full Details Tamil: இந்து மதத்தில், அமாவாசை முன்னோர்களின் வழிபாட்டிற்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. அதிலும், சனி அமாவாசை அன்று வரும் சனிப்பெயர்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group  Join
 Whatsapp ChannelJoin
TelegramJoin
 

Sani Amavasai March 29 Full Details Tamil

2025-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29-ஆம் தேதி, சனிப்பெயர்ச்சி நடைபெற உள்ளது. அன்று சனி அமாவாசை மற்றும் சூரிய கிரகணம் சேர்ந்து வருவது, ஜோதிடத்தில் மிகவும் அரிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.

சனி பகவான் கர்ம காரகர் என்று அழைக்கப்படுகிறார். சனீஸ்வரனுக்கு உகந்த சனிக்கிழமையில், அதிலும் சனி அமாவாசையில் சனிப்பெயர்ச்சி நடைபெறுவதும், அன்று சூரிய கிரகணம் ஏற்படுவதும், இந்த வருடத்தின் மிக அற்புத நிகழ்வாக ஜோதிடத்தில் கருதப்படுகிறது.

சனி அமாவாசை தினத்தில் செய்யப்படும் தர்ப்பணங்களும், தானங்களும் முன்னோர்களின் ஆசி பெற உதவும்.

ஜாதகத்தின் சனியின் நிலையை வலுப்படுத்தவும், ஏழரை நாட்டு சனி உள்ளிட்டவற்றால் பாதிப்புக்குள்ளாகும் ராசிக்காரர்களும், சனி அமாவாசையில் சில பரிகாரங்கள் செய்வதன் மூலம் மகிழ்ச்சியான வாழ்க்கையை பெறலாம்.

சனி அமாவாசை அன்று செய்ய வேண்டிய பரிகாரங்கள்:

  • எள்ளும் தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் செய்வதும், ஏழை பிராமணர்களுக்கு தானம் அளிப்பதும், ஏழரை நாட்டு சனி பாதிப்புகள் நீங்கவும், முன்னோர்களின் ஆன்மா சாந்தி அடையவும் உதவும்.
  • ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் அளிப்பதால், சனி பகவானின் மனம் குளிர்ந்து, தன்னுடைய அருள் பார்வையை உங்கள் பக்கம் செலுத்துவான். இதனால் கஷ்டங்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
  • சனி பகவானுக்கு பிடித்த, இரும்பு பாத்திரங்கள், எள், நல்லெண்ணெய், கருப்பு நிறத்தில் ஆனா ஆடைகள், குடை, செருப்பு ஆகியவற்றை தேவைப்பட்டவர்களுக்கு தானமாக வழங்குவது சிறப்பானது.
  • சனி அமாவாசை அன்று, சனி பகவானை வழிபடுவதோடு, சுந்தரகாண்டம் பாராயணம் செய்வதும், ஹனுமான் சாலிசா பாராயணம் செய்வதும் மனதிற்கு சந்தோசத்தை கொடுக்கும் பித்ரு தோஷம் நீங்கும்.
  • சனி அமாவாசை தினத்தில், அரச மரத்தின் கீழ் விளக்கேற்றி, சனி காயத்ரி மந்திரம் ஜெபிப்பதன் மூலம், நாட்டுச் சனியின் தாக்கம் குறையும்.

இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

Leave a Comment

error: Content is protected !!