மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 குறித்து இன்று வெளியான மகிழ்ச்சி தகவல்!!
Magalir Urimai Thogai 1000 Rupees Latest Update June 1
Magalir Urimai Thogai 1000 Rupees Latest Update June 1 கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம் ஆயிரம் வழங்கும் இந்த திட்டத்தில் புதிய பயனாளர்கள் இணைக்கப்படுவது தொடர்பான அறிவிப்பு தேர்தல் நடத்தை விதிமுறைகள் நீக்கப்பட்ட பின்னர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது எவ்வளவு பேர் இணைக்கப்படுவார்கள் என்பது குறித்த ஒரு முக்கிய தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
மகளிர் உரிமைத்தொகை ரூ.1000
திமுக அரசின் தேர்தல் அறிக்கையில் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூபாய் 1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று சொல்லப்பட்டு இருந்தது. ஆனால் நிதிநிலைமை அதற்கு இடம் தரவில்லை எனவே இரண்டு கோடியே 24 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ள தமிழகத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பெண்களுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கலாம் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் வழங்கி வருகின்றது இதற்கான நிதியை கடந்தாண்டு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ஒதுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
50 சதவீதத்துக்கும் அதிகமான பெண்களை குறைக்க வேண்டும் என்னும் நிலையில் பொருளாதார தகுதிகள் வரையறுக்கப்பட்டன. ஆனால் அரசு அறிவித்த பொருளாதார தகுதி பட்டியலுக்குள் ஒரு கோடிக்கும் அதிகமானோர் இருந்தனர். ஒரு கோடியே 63 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில் முதலில் ஒரு கோடியே 6,52 ஆயிரம் பேர் மகளிர் உரிமைத்தொகை பயனாளர்களாக சேர்க்கப்பட்டு அவர்களுக்கு செப்டம்பர் 15 ,2023 முதல் ஒவ்வொரு மாதமும் அவர்களின் வங்கி கணக்கில் ரூபாய் 1000 உரிமை தொகையானது வரவு வைக்கப்பட்டு வருகின்றது.
புதிய விண்ணப்பங்கள் விநியோகம்!
தகுதியுள்ள பெண்கள் நீக்கப்பட்டதால் அவர்கள் மேல்முறையீடு செய்ய வாய்ப்பானது வழங்கப்பட்டது அந்த வகையில் தற்போது சுமார் ஒரு கோடியே 15 லட்சம் பெண்கள் மொத்தமாக தகுதி உள்ளவர்களாக தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மாதம் ரூபாய் ஆயிரமானது வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தகுதி உள்ள பல பெண்கள் இன்னும் எங்களை இணைக்கவில்லை என கூறி வந்தனர் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த ஆளுங்கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சார்ந்த சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் முதலமைச்சர்கள் என மக்கள் பிரதிநிதிகள் அத்தனை பேரையும் சூழ்ந்து கொண்டு மக்கள் கேட்ட கேள்வி உரிமை தொகை எங்களுக்கு எப்போது வரும் என்பதுதான்.
இந்த மகளிர் உரிமைத்தொகை திட்டம் சிறப்பு திட்ட செயலாக்க துறை மூலம் செயல்படுத்தப்படுகின்றது தற்போது அந்த துறையின் அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் மக்களவைத் தேர்தலுக்கு பின்னர் இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்த ஒரு கோடியே 63 லட்சம் பேருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று உறுதி அளித்தார். இந்த நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று மகளிர் உரிமைத் தொகை திட்ட அதிகாரிகள் வட்டத்தில் இருந்து வந்துள்ளது.
அதன்படி கூடுதலாக 2 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு மகளை உரிமைத்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கி விட்டதாக கூறுகிறார்கள். புதிய 14கள் இணைக்கப்படுவதற்கான விண்ணப்பங்கள் ஜூன் இரண்டாவது வாரம் முதல் வழங்கப்படும் என்றும் ஜூலை மாதம் முதல் அவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை ரூபாய் 1000 வழங்கப்படும் என்று கூறுகிறார்கள். விண்ணப்பங்கள் அச்சடிக்கும் பணி விரைவில் தொடங்கும் என்றும் கூறுகிறார்கள்.
புதிய ரேஷன் அட்டை விநியோகம்!
இதற்கிடையே புதிய ரேஷன் அட்டைகள் விநியோகிக்கப்படாமல் உள்ள நிலையில் விரைவில் அதை வழங்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் .புதிய ரேஷன் அட்டைகள் வழங்கினால் மட்டுமே உரிமைத் தொகை திட்டத்தில் இணைக்க முடியும் என்பதால் அந்தப் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டுமென்ற கோரிக்கைகள் வந்துள்ளது.