தமிழகத்தில் ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா?- வெளியான முக்கிய தகவல்!! TN School Reopen Date 2024 New Update Happy News

தமிழகத்தில் ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா?- வெளியான முக்கிய தகவல்!!

TN School Reopen Date 2024 New Update

TN School Reopen Date 2024 New Update வருகின்ற ஜூன் 10ஆம் தேதி அன்று தமிழகத்தில் அனைத்து வகை பள்ளிகளும் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
TN School Reopen Date 2024 New Update
TN School Reopen Date 2024 New Update

தமிழகத்தில் 10, 11 ,12 ஆம் வகுப்பு களுக்கான பொதுத்தேர்வானது மார்ச் ஒன்றாம் தேதி தொடங்கி ஏப்ரல் எட்டாம் தேதி வரை நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து நான்காம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை ஏப்ரல் இரண்டாம் தேதி முதல் ஏப்ரல் 23ஆம் தேதி வரை முழு ஆண்டு தேர்வானது நடந்து முடிந்தது. மேலும் ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் ஏப்ரல் இரண்டாம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை தேர்வானது நடந்து முடிந்தது.

கத்திரி வெயில் தாக்கம்

தமிழகத்தில் கோடை காலமானது மார்ச் மாத இறுதியில் இருந்தே ஆரம்பித்து விட்டதால் ஏப்ரல் மாதத்தில் கணிசமாக வெயிலின் பதிவு அதிகமாக இருந்தது. இதனைத் தொடர்ந்து கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் ஆனது மே மாதத்தில் உச்சகட்ட வெப்பத்தை ஏற்படுத்தும்.

எனவே அந்த வகையில் இந்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து கடுமையான வெயில் ஆனது வாட்டி வதைத்து வந்தது மார்ச் மாத துவக்கத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்க தொடங்கிவிட்டது. அதிலும் கடந்த ஏப்ரல் மாதத்தில் பெரும்பாலான இடங்களில் வெயில் ஆனது 100 டிகிரியை கடந்து பதிவாகி இருந்தது.

இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் என்ன படுகின்ற கத்திரி வெயில் கடந்த நான்காம் தேதி தொடங்கி 25 நாட்கள் வரை நீடிக்கும் இந்த கத்திரி வெயிலின் காலம் மே 29ஆம் தேதி உடன் முடிவடைகிறது வானிலை ஆய்வு மையத்தை பொருத்தமட்டில் அக்னி நட்சத்திரம் என்று அவர்கள் குறிப்பிடப்படுவதில்லை. இருந்தாலும் கோடை காலத்தின் இறுதி பகுதியான மே மாதத்தில் வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருப்பதை அவர்கள் மறுக்கவில்லை. அந்த வகையில் இந்த காலகட்டத்தில் வெப்பநிலை ஆனது அதிகமாக இருக்கும் என்றும் அனல் காற்றுடன் அதிகபட்ச வெப்பம் பதிவாக வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

அக்னி நட்சத்திர காலத்தில் கலந்த 2017 ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் தேதியில் திருத்தணியில் 113.9 டிகிரி வெயில் பதிவானது தான் அதிகபட்ச வெயில் பதிவாக கூறப்படுகிறது. அதற்கு முன்னர் 2003 ஆம் ஆண்டில் சென்னை மற்றும் வேலூரில் வேலூரில் 113 டிகிரி பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் வாக்கு எண்ணிக்கை

வருகின்ற ஜூன் நான்காம் தேதி நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை எண்ணப்படுவதால் மாணவர்களுக்கு தேவையற்ற பதற்ற நிலை உருவாகும். எனவே அதன் பின்னர் பள்ளிகள் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்து வந்தனர்.

தமிழகத்தில் ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா?

இதனிடையில் ஜூன் ஒன்றாம் தேதி இந்த வெப்பத்தினால் தேர்தல் முடிவுகள் அறிவிப்பின் காரணமாகவும் பள்ளி கல்லூரிகளுக்கு அறிவிக்கப்பட்ட விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்காமல் வரும் ஜூன் 10ஆம் தேதி தமிழகத்தில் அனைத்து வகை பள்ளிகளும் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இச்செய்தியை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. எனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பை தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்,.

Leave a Comment

error: Content is protected !!