ஜூன் 21 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு!- மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!
School Reopen Date 2024 CBSE Students Puducherry
School Reopen Date 2024 CBSE Students தமிழ்நாட்டில் ஜூன் 10ஆம் தேதிதான் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
முன்னதாக 6ஆம் தேதியே பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில் சுட்டெரிக்கும் கோடை வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு தேதியை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். முன்னதாக வெப்பத்தின் தாக்கம் காரணமாக தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை திருநின்றவூரை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவர் சக்தி தன்னுடைய நண்பனின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சிக்கு நேற்று சென்றுள்ளார். அப்போது வெயில தாங்க முடியாமல் தரையில் சுருண்டு விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவ்வாறு வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாக காணப்படுகிறது.
மேலும் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களின் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 110 டிகிரிக்கும் மேல் வெப்பநிலை பதிவாகி வருகிறது. வெப்ப வாதம் காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
தலைநகர் சென்னையில் 108 டிகிரியாக வெப்பம் பதிவாகியுள்ளது. எனவே பள்ளிகளை திறப்பது சரியாக இருக்காது. ஜூன் 15ஆம் தேதிக்கு பின்னர் பள்ளிகளை திறக்க முடிவெடுக்கலாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் தான் அதிகாரிகள் உடன் ஆலோசனை நடத்திய பள்ளிக் கல்வித்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. எனவே ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறப்பிற்கு ஏற்ப வெளியூரில் இருக்கும் பெற்றோர்களும், மாணவர்களும் மெதுவாக கிளம்பி வரலாம். அதற்குள் வெப்பத்தின் தாக்கம் குறைந்தால் நல்லது. இல்லையெனில் மீண்டும் பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழும் என்று சொல்லப்படுகிறது.
புதுச்சேரியில் வெயிலின் தாக்கம் காரணமாக ஜூன் 6ஆம் தேதியில் இருந்து ஜூன் 12ஆம் தேதிக்கு பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டது. வழக்கமாக தமிழகத்தை பின்பற்றி தான் புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்கும். இம்முறை அவர்கள் முந்திக் கொண்டார். மேலும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு 50 நாட்கள் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த மாணவர்களுக்கு ஜூன் 21ஆம் தேதி தான் பள்ளிகள் திறக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.