மாதந்தோறும் ரூ.1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் உடனே விண்ணப்பிங்க.. யாருக்கு.. தமிழக அரசின் இந்த அசத்தலான திட்டம்!! Puthumai Pen Thittam New Update June 2

மாதந்தோறும் ரூ.1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் உடனே விண்ணப்பிங்க.. யாருக்கு.. தமிழக அரசின் இந்த அசத்தலான திட்டம்!!

Puthumai Pen Thittam New Update June 2

Puthumai Pen Thittam New Update June 2 தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மாணவிகள் பொருளாதார காரணங்களால் 12 ஆம் வகுப்பிற்கு பின்னர் உயர் கல்வியை தொடர முடியாமல் போய்விடுகிறது எனவே மாணவிகள் தங்கள் கல்வியை தொடர வேண்டும் என்பதற்காக பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற நோக்கில் தமிழக அரசு ஆனது சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் மூலம் புதுமைப் பெண் என்று உதவித்தொகை திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
Puthumai Pen Thittam New Update June 2
Puthumai Pen Thittam New Update June 2

அந்த வகையில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தில் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 1000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலமாக மாணவிகளின் கல்வித் தரமானது உயர்வதுடன் மட்டுமல்லாமல் குழந்தை திருமணமும் தடுக்கப்படுகிறது.

இந்த நிலையில் ராமநாதபுர மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் அவர்கள் அரசு பள்ளியில் பயின்ற 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவிகள் மேற்படிப்பை தொடர புதுமைப் பெண் திட்டத்திற்கு விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவித்திருக்கிறார்.

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்திற்கான தகுதிகள்:

இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் மாணவிகள் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்திருக்க வேண்டும்.

அதேபோல் இலவச கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் RTE மூலம் 6 முதல் 8 வகுப்பு வரை தனியார் பள்ளியிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியிலும் படித்த மாணவிகள் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டதிற்கு விண்ணப்பம் செய்ய தகுதியானவர்கள் ஆவர்.

ஒரு வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் உயர்கல்வி தொடர இருக்கும் பட்சத்தில் அவர்கள் அனைவருக்கும் இந்த திட்டத்தின் மூலம் உதவித் தொகை கிடைக்கும்.

12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு உயர் கல்வி தொடர இருக்கும் மாணவிகளுக்கு மட்டுமே இந்த திட்டம் பொருந்தும்.மாணவிகளின் பயிற்சி காலத்தில் இந்த உதவித் தொகை வழங்கப்படாது.

Leave a Comment

error: Content is protected !!