குழந்தைகளுக்கு பயன்படும்  அதிக லாபம் தரக்கூடிய போஸ்ட் ஆபீஸ் திட்டம் என்ன தெரியுமா?  NPS Vatsalya VS SSY Scheme Tamil Jan 19

குழந்தைகளுக்கு பயன்படும்  அதிக லாபம் தரக்கூடிய போஸ்ட் ஆபீஸ் திட்டம் என்ன தெரியுமா? 

NPS Vatsalya VS SSY Scheme Tamil Jan 19

NPS Vatsalya VS SSY Scheme Tamil Jan 19: குழந்தைகளுக்கு பயன்படும் வகையில் சிறப்பு சேமிப்பு திட்டங்கள் பல அமலில் உள்ளது. இதில் NPS வாத்சல்யா திட்டம் மற்றும் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் முக்கியமான ஒன்றாகும். இதில் எந்த திட்டத்தை தேர்ந்தெடுப்பது என பெற்றோர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group  Join
 Whatsapp ChannelJoin
TelegramJoin
 
NPS Vatsalya VS SSY Scheme Tamil Jan 19
NPS Vatsalya VS SSY Scheme Tamil Jan 19

NPS வத்சல்யா என்பது குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட தேசிய ஓய்வூதிய அமைப்பின் (NPS) கீழ் இயங்கும் முதலீட்டுத் திட்டம். இது அதிக வருமானத்தை வழங்கும் ஒரு திட்டம் ஆகும். இத்திட்டத்தில் 10 முதல் 12 சதவிகிதம் வட்டி வழங்கப்படும்.

11% ஆண்டு வட்டியில் 10 வருட முதலீட்டு காலத்திற்கு NPS வாத்சல்யா திட்டத்தில் 10,000 ரூபாயை முதலீடு செய்தால் மொத்த கார்பஸ் 1.86 லட்சம் ரூபாயாக இருக்கும். 18 வயது பூர்த்தியானதும் கணக்கு நிலையான NPS கணக்கிற்கு மாறுகிறது. இந்த மாற்றம் 60 ஆண்டுகள் வரை தொடர்ந்து முதலீடு செய்ய அனுமதிக்கிறது.

சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம் (SSY) என்பது பெண் குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட அரசாங்க சேமிப்பு திட்டமாகும். இது தற்போது ஆண்டுக்கு 8.2% வட்டி விகிதத்தை வழங்குகிறது. இந்த வட்டி விகிதம் காலாண்டுக்கு ஒரு முறை மாறுபடும்.

ஒரு ஆண்டுக்கு 10,000 ரூபாயை முதலீடு செய்தால் சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தில் 1.58 லட்சம் கார்பஸ் கிடைக்கும். 18 வயது ஆன பிறகு கூடுதல் பங்களிப்புகள் இல்லாமல் ஆறு வருட கூடுதல் வட்டியை வழங்குகிறது.

  • ஒரு பெண் குழந்தைக்கு வயது 10 அடையும் வரை அவர் பெயரில் கணக்கைத் தொடங்கலாம்.
  • ஒரு பெண் குழந்தைக்கு ஒரு கணக்கு மட்டுமே தொடங்க முடியும்.
  • பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர், தங்கள் குழந்தையின் பெயரில், பிறப்புச் சான்றிதழுடன் கணக்கைத் தொடங்கலாம்.
  • ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரு பெண் குழந்தைகளுக்கு மட்டுமே இத்திட்டத்தின் கீழ்கணக்கைத் தொடங்கலாம்.
  • 18 வயது முடியும் வரை பெண்ணின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் இயக்க வேண்டும். 18 வயதுக்குப் பிறகு யார் பெயரில் கணக்கு இருக்கிறதோ, அவர் தான் கணக்கை இயக்க வேண்டும்.

Leave a Comment

error: Content is protected !!