மகளிர் உரிமை தொகை பெறாதவர்களுக்கு மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு -தமிழக அரசு சூப்பர் சர்ப்ரைஸ் அறிவிப்பு! Magalir Urimai Thogai Apply Again Chance 2025

மகளிர் உரிமை தொகை பெறாதவர்களுக்கு மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு- தமிழக அரசு சூப்பர் சர்ப்ரைஸ் அறிவிப்பு!

Magalir Urimai Thogai Apply Again Chance 2025

Magalir Urimai Thogai Apply Again Chance 2025: தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2025 – 2026ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் (14ஆம் தேதி) தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group  Join
 Whatsapp ChannelJoin
TelegramJoin
 
Magalir Urimai Thogai Apply Again Chance 2025
Magalir Urimai Thogai Apply Again Chance 2025

2021ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்புக்கு வந்த திமுக இந்த ஆட்சிக் காலத்தில் தாக்கல் செய்யும் இறுதி முழு பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது. 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வருவதால், அடுத்த நிதியாண்டிற்கான பட்ஜெட் இடைக்கால பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படும்.

இதற்கிடையே, பட்ஜெட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு 13 ஆயிரத்து 807 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை, மகளிர் உரிமைத்தொகை பெற்றிடாத தகுதிவாய்ந்த இல்லத்தரசிகள், இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க உரிய வாய்ப்புகள் விரைவில் வழங்கப்படும் என்றும் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.

வரும் நிதியாண்டில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு 37 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வங்கிக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். விடியல் பயணத் திட்டத்துக்காக மூன்றாயிரத்து 600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், பெண்களின் பங்கை மேலும் அதிகரிக்கும் நோக்கில், அடுத்த 5 ஆண்டுகளில் 1 லட்சம் மகளிரை தொழில்முனைவோராக உயர்த்திட, 225 கோடி ரூபாயில் பெருந்திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும் என்று தங்கம் தென்னரசு அறிவித்தார்.

இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பலன் பெறாதவர்களுக்கு தமிழக அரசு சார்பில் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை திட்டத்தில் பலன் பெறாத பெண்களின் செல்போன்களுக்கு தமிழக அரசு சார்பில் எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டுள்ளது.

 அதில், "கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்கு ரூ.13,807 ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை பலன்பெறாதோருக்கு உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்கு ரூ.13,807 ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை பலன்பெறாதோருக்கு உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

error: Content is protected !!