7 கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் விவரங்கள் முழுமையான அட்டவணை!
Loksabha Election 2024 Full Schedule Details
Loksabha Election 2024 Full Schedule Details வரும் நாடாளுமன்ற தேர்தல் ஆனது இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடத்த இந்திய தேர்தல் ஆணையம் ஆனது அறிவிப்பினை வெளியிட்டுள்ளது அதன்படி ஒவ்வொரு கட்டமாக எந்தெந்த மாநிலங்களில் எத்தனை தொகுதிகளில் எந்த தேர்தல் வாக்குப்பதிவுகள் நடைபெறுவது குறித்து இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
இதன்படி ஒவ்வொரு கட்டத்துக்குமான தேர்தல் நடத்துவதற்கான தேர்தல் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார்கள். அதில் வேட்பு மனு தாக்கல் தொடங்கி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் வரை முழுமையான விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ஏழு கட்ட தேர்தல்கள் எங்கெங்கு நடைபெறுகிறது என்பதை முழுமையாக நாம் பார்க்கலாம்.
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தில்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது மக்களவைத் தேர்தல் தேதிகள் உள்பட முழுவிபரங்களையும் அவர் அறிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் மொத்தம் 543 இடங்களுக்கு 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
மேலும், எந்தெந்த மாநிலங்களில் எப்போது வாக்குப்பதிவு நடைபெறுகிறது என்கிற முழு அட்டவணையும் வெளியாகியுள்ளது.
• அதில் முதற்கட்டமாக 102 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி, அருணாச்சலப் பிரதேசம் 2, அசாம்5, பிகார் 4, சத்தீஸ்கர் 1, மத்தியப் பிரதேசம் 6, மகாராஷ்டிரம் 5, மணிப்பூர் 2, மேகாலயா 2, மிசோரம் 1, நாகலாந்து 1, ராஜஸ்தான் 12, சிக்கிம் 1, தமிழ்நாடு 39, திரிபுரா 1, உத்திரப் பிரதேசம் 8, உத்தர்கண்ட் 5, மேற்கு வங்கம் 3, அந்தமான் நிகோபார் தீவுகள் 1, ஜம்மு-காஷ்மீர் 1, லட்சத்தீவு 1, புதுச்சேரி 1.
• இரண்டாம் கட்டமாக 89 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி அசாம் 5, பிகார் 5, சத்தீஸ்கர் 3, கர்நாடகம் 14, கேரளம் 20, மத்தியப் பிரதேசம் 7, மகாராஷ்டிரம் 8, மணிப்பூர் 1, ராஜஸ்தான் 13, திரிபுரா 1, உத்திரப் பிரதேசம் 8,மேற்கு வங்கம் 3, ஜம்மு-காஷ்மீர் 1.
• மூன்றாம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு மே 7 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி அசாம் 4, பிகார் 5, சத்தீஸ்கர் 7, கோவா 2, குஜராத் 26, கர்நாடகம் 14, மத்தியப் பிரதேசம் 8, மகாராஷ்டிரம் 11, உத்திரப் பிரதேசம் 10, மேற்கு வங்கம் 4, தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ 2, ஜம்மு-காஷ்மீர் 1.
• நான்காம் கட்டமாக 96 தொகுதிகளுக்கு மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி, ஆந்திரம் 25, பிகார் 5,ஜார்க்கண்ட் 4, மத்தியப் பிரதேசம் 8, மகாராஷ்டிரம் 11, ஒடிசா 4, தெலங்கானா 17, உத்திரப் பிரதேசம் 13, மேற்கு வங்கம் 8, ஜம்மு-காஷ்மீர் 1.
• ஐந்தாம் கட்டமாக 49 தொகுதிகளுக்கு மே 20ஆம் தேதி தேர்ல் நடைபெறுகிறது. அதன்படி, பிகார் 5,ஜார்க்கண்ட் 3, மகாராஷ்டிரம் 13, ஒடிசா 5, உத்திரப் பிரதேசம் 14, மேற்கு வங்கம் 7, ஜம்மு-காஷ்மீர் 1, லடாக் 1.
• ஆறாம் கட்டமாக 57 தொகுதிகளுக்கு மே 25ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி, பிகார் 8, ஹரியாணா 10, ஜார்க்கண்ட் 4, ஒடிசா 6, உத்திரப் பிரதேசம் 14, மேற்கு வங்கம் 8, தில்லி 7.
• ஏழ மற்றும் கடைசி கட்டமாக ஜூன் 1ஆம் தேதி 57 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி, பிகார் 8, ஹிமாச்சல் 4, ஜார்க்கண்ட் 3, ஒடிசா 6, பஞ்சாப் 13, உத்திரப் பிரதேசம் 13, மேற்கு வங்கம் 9, சண்டீகர் 1.