Ration Card: ரேஷன் அட்டைதாரர்களே!.. வெளியானது சூப்பர் ஹாப்பி நியூஸ் என்ன தெரியுமா?
Happy News For Ration Card Holders
Happy News For Ration Card Holders: ரேஷன் கடைகளில் எடை குறைவான பொருட்கள் விநியோகிக்கப்படுவதை தடுக்கும் நோக்கில், புதிய வகை எலக்ட்ரானிக் தராசுகள் விரைவில் பயன்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
புளூடூத் அல்லது யு.எஸ்.பி கேபிள் மூலம் ‘பாயிண்ட் ஆஃப் சேல்’ கருவியுடன் இணைக்கப்பட்டு ரேஷன் கடைகளில் பயன்படுத்தும் வகையில் இந்த தராசுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் அவற்றின் எடை போன்ற தகவல்கள் ‘பாயிண்ட் ஆஃப் சேல்’ கருவியில் பதிவு செய்யப்படுகின்றன.
புதிய எலக்ட்ரானிக் தராசில் வைக்கப்படும் பொருளின் எடை, தானியங்கி தொழில்நுட்பம் மூலம் ‘பாயிண்ட் ஆஃப் சேல்’ கருவிக்கு அனுப்பப்பட்டு பதிவு செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் ‘பாயிண்ட் ஆஃப் சேல்’ கருவியின் மென்பொருள் மேம்படுத்தப்பட்டு, விற்பனையாளர்களால் பொருட்களின் எடையை சுயமாக உள்ளீடு செய்ய இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.