தமிழக அரசின் இலவச வீடு திட்டம் எவ்வாறு விண்ணப்பிப்பது?- முழு விவரம் இதோ!
Free House Apply Details In Tamil 2025
Free House Apply Details In Tamil 2025: தமிழ்நாடு அரசு பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு என்றே பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில், தற்போது “இலவச வீடு கட்டுதல் திட்டம்” குறித்து இந்த பதிவில் விரிவாக காண்போம்.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
அதாவது, தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையால் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், இத்திட்டத்தில் தகுதியான பழங்குடியினர், எஸ்சி மற்றும் எஸ்டி சமூகங்களை சேர்ந்தவர்களுக்கு இலவசமாக வீடு கட்டி தரப்படுகிறது.
மேலும், விண்ணப்பதாரர் தமிழ்நாட்டில் வசிப்பவராகவும், நிலத்திற்கான வீட்டுமனை பட்டாவும் வைத்திருக்க வேண்டும். அதேபோல், ஆதார் அட்டை, சாதி சான்றிதழ் மற்றும் முகவரி சான்று போன்றவை இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களாகும்.
மேலும், இத்திட்டத்தில் இணைய விருப்பமுள்ளவர்கள் அருகிலுள்ள மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு நேரடியாக சென்று, முழு விவரங்களையும் தெரிந்து கொண்டு விண்ணப்பித்து பயனடையலாம்.