பிப்ரவரி 5 பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை!- சற்றுமுன் வெளியான அறிவிப்பு!
February 5 Holiday News 2025
February 5 Holiday News 2025: தமிழகத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு பிப்ரவரி 5ஆம் தேதி விடுமுறை குறித்து தமிழக அரசு முக்கிய அரசாணையை வெளியிட்டுள்ளது.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
அதன்படி பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
பிப்ரவரி 5 விடுமுறை
பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெறுவதால் இந்த விடுமுறையை அறிவித்துள்ளது இடைத்தேர்தல் நடைபெறும் பகுதிகளில் அன்று பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொகுதியில் இதற்கு முன் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்திருந்த தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் திரு இ. வி. கே. எஸ். இளங்கோவன் அவர்கள் உடல் நலக் குறைவு காரணமாக நவம்பர் 14ஆம் தேதி விண்ணுலகை அடைந்தார்.
எனவே அவரது மறைவை தொடர்ந்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியானது காலியான தொகுதியாக அறிவிக்கப்பட்டு தற்போது இடைத்தேர்தல் ஆனது வேட்பு மனு தாக்கல் தொடங்கி பிரச்சாரங்கள் நடைபெற்று வருகிறது எனவே பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலை முன்னிட்டு எந்த விடுமுறையை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையம் ஆனது டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதியை அறிவிக்கும் போதே ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியும் அறிவித்தது அந்த வகையில் டெல்லி சட்டமன்றத் தொகுதி தேர்தல் மற்றும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் ஆகியவை பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறுகிறது இதுவரை ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு 47 வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.
இந்த முறை திமுக கூட்டணிக்கு எதிராக அதிமுக மற்றும் பாஜக தலைமையிலான கூட்டணிகள் இந்த இடைத்தேர்தலை ஒட்டுமொத்தமாக புறக்கணித்து உள்ளனர் இதில் முக்கிய கட்சியாக திமுகவும் அந்த கட்சிக்கு எதிராக நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகின்றது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் திமுக சார்பாக சந்திர குமாரும் நாம் தமிழர் கட்சி சார்பாக சீதாலஷ்மியும் போட்டியிடுகின்றனர் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்று முடிந்தவுடன் பிப்ரவரி 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையானது நடைபெறுகிறது இதை இந்திய தேர்தல் ஆணையம் ஆனது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.