வாக்கு எண்ணிக்கை தேதியில் மாற்றம் தேர்தல் ஆணையம் அறிவித்த முழு விவரம் என்ன?
Election counting date change news in tamil 2024
Election counting date change news in tamil 2024 நாடாளுமன்ற தேர்தல் ஆனது இந்தியாவில் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக இந்த தேர்தல் ஆனது நடைபெற உள்ளது இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எனப்பட உள்ளன. மக்களவைத் தேர்தலுடன் ஆந்திரம் ஒடிசா அருணாச்சல பிரதேசம் சிக்கிம் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலும் நடத்தப்பட உள்ளது மேலும் தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் காலியாக உள்ள 26 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
அருணாச்சல பிரதேசத்தில் இரண்டு மக்களவைத் தொகுதிகளுக்கும் 60 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே நேரத்தில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவானது நடைபெறுகிறது இதே நாளில் சிக்கிமில் உள்ள 32 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவானது நடைபெற உள்ளது.
ஆந்திராவில் 175 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் 25 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே 13 இல் வாக்குப்பதிவானது நடைபெற உள்ளது ஒடிசாவில் 147 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் 21 மக்களவைத் தொகுதிகளுக்கும் மே 13 20 25 மற்றும் ஜூன் ஒன்று ஆகிய தேதிகளில் நான்கு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் தேர்தல் ஆணையம் ஆனது அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தேதியில் மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் ஆனது அறிவிப்பை வெளியிட்டுள்ளது அதன்படி ஜூன் நான்காம் தேதிக்கு பதிலாக ஜூன் இரண்டாம் தேதியே வாக்குகள் எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் ஆனது அறிவித்துள்ளது பின்வரும் காரணங்களுக்காக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் ஜூன் 2 உடன் முடிவடைவதால், வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றம்.
மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட உள்ளன.
Election counting date change news in tamil 2024
அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 2ம் தேதியே எண்ணப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு.