Chitra Pournami 2024 today News tamil
சித்ரா பெளர்ணமி 2024 யாரை வழிபட வேண்டும்?
சித்ரா பெளர்ணமி 2024 யாரை வழிபட வேண்டும்? சித்ரா பெளர்ணமி 2024 சித்திரை மாதத்தில் வரக்கூடிய முழுமை பெற்ற சித்ரா பெளர்ணமி என்பது மிகவும் விஷேமான நாளாகும். இந்த நாளில் நம் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது சித்ர குப்தரின் வழிபாடு. சித்ரா பெளர்ணமி அன்று நாம் சித்ர குப்தரை வழிபட்டால் நம்முடைய பாவக் கணக்கு புண்ணிய கணக்காக அவர் மாற்றுவார் என பொருள் கிடையாது. இந்த நாளில் வழிபடுவதால் பாவங்களை செய்ய விடாமல் புண்ணியம் செய்யக்கூடிய நல்ல மனநிலையை மாற்றி தருவார். நீங்கள் செய்த பாவம் எந்த விதத்திலும் மறையப் போவதில்லை. Chitra Pournami 2024 today News tamil
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
கிரிவலம் என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தான். இது உலகில் பிரசித்தி பெற்ற ஸ்தலங்களில் ஒன்றாகும். குறிப்பாக, பஞ்சபூத ஸ்தலங்களில் இது அக்னி ஸ்தலமாக விளங்குகிறது.
இங்கு ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் கோவிலுக்கு பின்புறம் உள்ள மலையை சுற்றி சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம்.
திருவண்ணாமலை கோவிலில் பல சிறப்புகளுக்கு பெயர் பெற்றிருந்தாலும், இந்த மலையை மக்கள் சிவனாக வழிபடுவது தான்
மற்றொரு சிறப்பு அம்சமாகும். காரணம், லிங்கமே மலையாக இருப்பதால் தான்.
அதுமட்டுமின்றி, திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி கிடைக்கும் என்று நம் முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள். அந்த அளவிற்கு இந்த திருவண்ணாமலை கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. எனவே, இப்படி பல சிறப்பு அம்சங்கள் இந்த கோவிலில் இருப்பதால், இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
இந்நிலையில், இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் என்னவென்றால், ஏப்ரல் 23ஆம் தேதி செவ்வாய்க்கிழமை, அதாவது நாளை அதிகாலை 4.16 மணிக்கு தொடங்கி, மறுநாள் ஏப்ரல் 24ஆம் தேதி புதன்கிழமை அதிகாலை 5.47 மணிக்கு நிறைவடைகிறது என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சித்ரா பெளர்ணமி 2024 யாரை வழிபட வேண்டும்?
பவுர்ணமிகளில் சிவபெருமானை வழிபடுவது மிகவும் விசேஷமானது. அது போல் சித்ரா பவுர்ணமி அன்று, சித்ரகுப்தரை வழிபட்டால் அவர் நமக்கு பாவம் செய்யும் எண்ணங்களை வரவிடாமல் தடுத்து, புண்ணியங்கள் செய்யும் எண்ணங்களை அருள்வார்கள் என்பது நம்பிக்கை. அதனால் தான் இந்த நாளில் சித்ரகுப்தரை வழிபடுகிறோம். கையில் ஏடும், எழுத்தாணியும் வைத்திருக்கும் சித்ர குப்தரை இந்த நாளில் வழிபடலாம். சித்ரா பவுர்ணமி அன்று சிவ பெருமான், சித்ர குப்தர், சந்திரன், சத்ய நாராயணர் ஆகியோரை வழிபடுவது மிகவும் சிறப்பு. பொதுவாக பவுர்ணமி வழிபாட்டை மாலை நேரத்தில், சந்திரன் உதயமான பிறகு தான் மேற்கொள்ள வேண்டும்.