விவசாய இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் வரப்போகுது.. முக்கிய அறிவிப்பு வெளியிட்ட மின்சார வாரியம்!
Agriculture Electricity Connection in Smart Meter Soon 2025
Agriculture Electricity Connection in Smart Meter Soon: சென்னை: விவசாயத்திற்கு மின்சாரம் செல்லும் மின் வழித்தடங்களில் பழுது ஏற்படுவதை தடுக்க, விவசாய பிரிவில், தினமும் எந்த நேரத்தில், எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது என்பதை, ‘ஸ்மார்ட்’ மீட்டர் வாயிலாக அறிய, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |

தமிழகத்தில் விவசாயத்திற்கு, மின் வாரியம் இலவசமாக மின் வினியோகம் செய்கிறது. தற்போது, 23.55 லட்சம் விவசாய மின் இணைப்புகள் உள்ளன.
கிராமங்களில் வீடு, விவசாயம், கடை உட்பட அனைத்து பிரிவுகளுக்கும், ஒரே வழித்தடத்தில் மின் வினியோகம் செய்யப்படுகிறது. தினமும் விவசாயத்திற்கு, 18 மணி நேரம்;
மற்ற இணைப்பு களுக்கு, 24 மணி நேரம் மின் வினியோகம் செய்யப்படுகிறது.
பல கிராமங்களில், விவசாயத்திற்கு மின் வினியோகம் செய்யாத நேரத்திலும் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. இதனால், அந்த வழித்தடங்களில் உள்ள வீடுகளில் குறைந்த மின்னழுத்த
பிரச்னை ஏற்பட்டு, மின் சாதனங்கள் பழுதாகின்றன.
எனவே, விவசாயத்திற்கு எவ்வளவு மின்சாரம்
பயன்படுத்தப்படுகிறது என்பதை அறிய, மின் மோட்டார்கள் பொருத்தப்பட உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மத்திய அரசு, மின் பயன்பாட்டு விபரத்தை அறிய, மீட்டர்
பொருத்தாமல் எந்த ஒரு மின் இணைப்பும் வழங்கக் கூடாது என,
மாநில மின் வாரியங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதனால், தமிழகத்தில், 2018ல் இருந்து, விவசாய மின்
இணைப்புக்கு மீட்டர் பொருத்தப்படுகிறது. மின் கட்டணம் இல்லாததால், அந்த மீட்டரில் பதிவாகும், மின் பயன்பாட்டை கணக்கெடுப்பதில்லை.
‘ஸ்மார்ட் மீட்டரில்’ எந்த நேரத்தில், எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்பட்டது என்பதை துல்லியமாக அறிய முடியும்.
ஒவ்வொரு பிரிவிலும், தினமும் எந்த நேரத்தில், எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப் படுகிறது என்ற விபரம் சேகரிக்கப்படுகிறது. அதற்கு ஏற்ப, மின் உற்பத்தி, மின்கொள்முதல் செய்ய திட்டமிடப்படும்.
அதன்படி, விவசாய இணைப்புகளில், எந்த நேரத்தில் அதிகமாக, குறைவாக மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது என்ற விபரம் தெரிந்தால், அதிக மின் பயன்பாடு உள்ள விவசாய இணைப்புகளில், அதற்கு ஏற்ப கூடுதல் திறனில் மின் சாதனங்கள் நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும். இதனால், மின்னழுத்த பிரச்னையை தடுக்க முடியும்.எனவே, விவசாய மின் இணைப்புகளில், ‘ஸ்மார்ட் மீட்டர்’
பொருத்தப்பட உள்ளது. சோதனை முயற்சியாக, 1,200
இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தி, கண்காணிக்கப்பட உள்ளது.
இந்த பணிக்கு ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய, ‘டெண்டர்’ கோரப்பட்டுள்ளது. அதன் வாயிலாக, மீட்டர் பொருத்தி, தகவல்கள் பெறப்படும். ஸ்மார்ட் மீட்டர் பொருத்தினாலும் விவசாயத்திற்கு தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனால், தமிழகத்தில் கடந்த 2018-ம் ஆண்டில் இருந்து விவசாய மின்இணைப்புக்கு மீட்டர் பொருத்தப்படுகிறது. மின்கட்டணம் இல்லாததால் அந்த மீட்டரில் பதிவாகும் மின்பயன்பாட்டை கணக்கெடுப்பதில்லை. மேலும், மின்பயன்பாட்டையும் அறிய முடிவதில்லை. இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், விவசாய மின்இணைப்புகளில் ஸ்மா்ட் மீட்டர் பொருத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.ஸ்மார்ட் மீட்டரில் எந்த நேரத்தில் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்பட்டது என்பதை துல்லியமாக அறிய முடியும்.
ஒவ்வொரு பிரிவிலும் தினமும் எந்த நேரத்தில் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது என்ற விவரமும் அறிய முடியும். இதன் மூலம், அதற்கு ஏற்ப மின்னுற்பத்தி, மின்கொள்முதல் செய்ய திட்டமிட முடியும். அதன்படி, விவசாய இணைப்புகளில் எந்த நேரத்தில் அதிகமாக, குறைவாக மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது என்ற விவரம் தெரிந்தால், அதிக மின்பயன்பாடு உள்ள விவசாய இணைப்புகளில், அதற்கு ஏற்ப கூடுதல் திறனில் மின்சாதனங்கள் நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும்.
இதனால், மின்னழுத்த பிரச்சினையை தடுக்க முடியும். எனவே, விவசாய மின்இணைப்புகளில் சோதனை முயற்சியாக 1,200 இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தி கண்காணிக்கப்பட உள்ளது. இந்தப் பணிக்கு ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளதாக மின்வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.