குரு பெயர்ச்சி 2025: அதிர்ஷ்டத்தை வாரிக் குவிக்க போகும் ராசிகள் யார் யார்? Guru Peyarchi 2025 Palangal

குரு பெயர்ச்சி 2025: அதிர்ஷ்டத்தை வாரிக் குவிக்க போகும் ராசிகள் யார் யார்?

Guru Peyarchi 2025 Palangal

Guru Peyarchi 2025 Palangal: பல வித வளங்களை அளிக்கும் குரு பகவான் மே மாதம் பெயர்ச்சி ஆகவுள்ளார். இதனால் அதிக நன்மைகளை அடையவுள்ள ராசிகள் எவை? யாருக்கு அதிக லாபம்?

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group  Join
 Whatsapp ChannelJoin
TelegramJoin

Guru Peyarchi Palangal: இந்த ஆண்டு 2 முக்கிய ஜோதிட நிகழ்வுகள் நடக்கவுள்ளன. மார்ச் மாத இறுதியில் சனி பெயர்ச்சியும், மே மாதம் குரு பெயர்ச்சியும் நடக்கும். இவை இரண்டும் முக்கிய ஜோதிட நிகழ்வுகளாக பார்க்கப்படுகின்றன. குரு பெயர்ச்சி 2025 -இன் தாக்கத்தால் அதிகமான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Guru Peyarchi 2025 Palangal
Guru Peyarchi 2025 Palangal
சுப கிரகமான சனி பகவான் மே மாதம் 14 ஆம் தேதி முதுன ராசியின் பெயர்ச்சி ஆவார். அவர் தற்போது ரிஷப ராசியில் உள்ளார். 
குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். இதனால் சில ராசிகளுக்கு நல்ல பலன்களும் சில ராசிகளுக்கு பிரச்சனைகளும் ஏற்படும். சில ராசிகளுக்கு இது ஒரு அற்புதமான நற்காலமாக இருக்கும். இந்த ராசிக்காரர்கள் குரு பகவானின் அருளால் பல வித வெற்றிகளை பெறுவார்கள். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மேஷம்: குரு பெயர்ச்சியின் தாக்கத்தால் மேஷ ராசிகளுக்கு இந்த காலத்தில் பல நன்மைகள் நடக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் வெற்றிகரமாக நடந்துமுடியும். பணம் சம்பாதிப்பதோடு, உயர் கல்வியையும் பெறுவீர்கள். நிதி நிலை நன்றாக இருக்கும். ஊதிய உயர்வுடன் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது.
சிம்மம்: குரு பெயர்ச்சி 2025 சிம்ம ராசிக்கார்ரகளுக்கு நற்பலன்களை அளிக்கும். அரசு வேலை தேடுபவர்களுக்கு வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலைமை நன்றாக இருக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும்.
கன்னி: குரு பெயர்ச்சி 2025 கன்னி ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை அளிக்கும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். குரு அருளால் செல்வம் பெருகும். புதிய வேலையைத் தொடங்க வாய்ப்பு கிடைக்கும்.

துலாம்: குரு பெயர்ச்சியின் தாக்கத்தால் துலாம் ராசிக்காரர்களுக்கு ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். பயணங்களை மேற்கொள்வீர்கள். இதனால் சாதகமான நன்மைகள் ஏற்படும். குரு பெயர்ச்சி 2025 பல வெற்றிகளையும், நிம்மதியையும் அளிக்கும்.  வேலையில் இருந்த தடைகளும் நீங்கும்.

கும்பம்: குரு பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களுக்கு அனுகூலமான பலன்களை அளிக்கும். இந்த காலத்தில் நிதி ஆதாயம் இருக்கும். உங்கள் விருப்பங்கள் அனைத்தும் இப்போது நிறைவேறும். அனைத்து பணிகளிலும் வெற்றி கிடைக்கும். திருமண வாழ்க்கையும் காதல் வாழ்க்கையும் நன்றாக இருக்கும்.

மாணவர்கள் படிப்பில் வெற்றி பெற, திருமண தடை நீங்க, குழந்தை செல்வம் கிடைக்க வியாழக்கிழமைகளில் குரு பகவானின் சன்னிதியில் விளக்கேற்றி வழிபடலாம்.

குரு பகவானின் அருள் பெற, ‘குரவே சர்வ லோகானாம், பீஷஜே பவரோகினாம்; நிதயே சர்வ வித்யானாம், க்ஷிணாமூர்த்தயே நமஹ’ என்ற ஸ்லோகத்தையும் ‘ஓம் விரு‌ஷபத் வஜாய வித்மஹே, க்ருணி ஹஸ்தாய தீமஹி, தந்நோ குருஹ் ப்ரசோதயாத்’ என்ற குரு காயத்ரி மந்திரத்தையும் தினமும் பாராயணம் செய்யலாம்.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. bossmedia இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

Leave a Comment

error: Content is protected !!