ஜியோ சூப்பர் ரீசார்ஜ் பிளான்.. வெறும் 100 ரூபாய் மட்டுமே!- 90 நாள் வேலிடிட்டி..
JIO 100 Rupees Recharge Plan
JIO 100 Rupees Recharge Plan: ஜியோசினிமா மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஆகிய 2 ஸ்ட்ரீமிங் தளங்களையும் ஒன்றாக இணைத்த பிறகு.. அதாவது ஜியோஹாட்ஸ்டார் ஆக இணைத்த பிறகு.. முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Jio) நிறுவனமானது அதன் அனைத்து ரீசார்ஜ் திட்டங்களிலிருந்தும் ஜியோசினிமா ஆப் நன்மைய நீக்கியது.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |

28 நாட்கள் செல்லுபடியாகும் ரூ,249 திட்டத்தில் இருந்து 365 நாட்கள் செல்லுபடியாகும் ரூ.3599 திட்டம் வரையிலாக.. கிட்டத்தட்ட அனைத்து ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்களில் இருந்து இலவச ஜியோசினிமா சந்தா நீக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த திட்டங்கள் ஜியோடிவி மற்றும் ஜியோகிளவுட் ஆகியவற்றை இரண்டு இலவச சேவைகளை மட்டுமே கூடுதல் நன்மைகளாக வழங்குகின்றன.
ரூ.100 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஜியோ ரீசார்ஜ் ஆனது ஒரு டேட்டா-ஒன்லி பிளான். இது மொத்தம் 5ஜிபி அளவிலான டேட்டாவை மட்டுமே வழங்கும். ஆனால் 3 மாதங்களுக்கான அல்லது 90 நாட்களுக்கான ஜியோஹாட்ஸ்டார் சந்தாவை இலவசமாக வழங்கும்.
சுவாரசியமான விஷயம் என்னவென்றால்.. இது ரூ.149 க்கு கிடைக்கும் ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை போல் மொபைல்-ஒன்லி சந்தா கிடையாது. அதாவது ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி கன்டென்ட்களை மொபைல் வழியாக மட்டுமே பார்க்க முடியும் என்கிற கட்டுப்பாடு ரூ.100 திட்டத்தில் இல்லை.
மாறாக இது ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட் டிவிகள் ஆகிய இரண்டிலும் 1080பி வரையிலான ரெசல்யூஷனின் கீழ் ஸ்ட்ரீம் செய்ய அனுமதிக்கும். இதேபோன்ற நன்மைகளை தான் – ஜியோ ஹாட்ஸ்டார் சூப்பர் திட்டமும் வழங்குகிறது. ஆனால் அந்த சந்தாவின் விலை ரூ.299 ஆகும். ஆக எப்படி பார்த்தாலும் ரூ.100 டேட்டா பிளானின் கீழ் கிடைக்கும் ஜியோஹாட்ஸ்டார் சந்தாவானது முற்றிலும் லாபகரமான தேர்வாக இருக்கும்.
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க – ஜியோவின் மற்ற டேட்டா ஒன்லி பிளான்களை போலவே ரூ.100 திட்டத்தின் கீழும் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகள் கிடைக்காது மற்றும் இதற்கென பிரத்தியேகமான சர்வீஸ் வேலிடிட்டி எதுவும் இருக்காது. மேலும் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்ய உங்களிடம் ஏற்கனவே ஆக்டிவ் ஆக இருக்கும் ஒரு மெயின் ரீசார்ஜ் தேவை என்பதை கவனத்தில் கொள்ளவும்.
முன்னதாக ஜியோ நிறுவனம் “இதேபோன்ற” புதிய கிரிக்கெட் பிளானை அறிமுகம் செய்து இருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. பெயர் குறிப்பிடுவது போலவே ஜியோவின் இந்த புதிய கிரிக்கெட் பிளான் ஆனது வரவிருக்கும் ஐபிஎல் 2025 போட்டிகளை லைவ் ஸ்ட்ரீமிங் செய்ய உதவும் ஒரு டேட்டா-ஒன்லி ரீசார்ஜ் ஆகும்.
இதன்கீழ் உங்களுக்கு மூன்று மாத காலத்திற்கான (90 நாட்களுக்கான) ஜியோ ஹாட்ஸ்டார் சந்தா இலவசமாக கிடைக்கும். இதோடு சேர்த்து 90 நாட்களுக்கு 15ஜிபி அளவிலான 4ஜி/5ஜி டேட்டாவும் கிடைக்கும். இதன்கீழ் கிடைக்கும் இலவச ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாவானது விளம்பர ஆதரவு உடன் வரும் மொபைல் சந்தா என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது
இந்த சாந்தாவின் கீழ் பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்கள் வழியாக ஒரு நேரத்தில் டிவைஸ் வழியாக 720பி என்கிற ரெசல்யூஷனின் கீழ் ஜியோ ஹாட்ஸ்டார் கன்டென்ட்களை ஸ்ட்ரீமிங் செய்யலாம். நினைவூட்டும் வண்ணம் ஜியோ ஹாட்ஸ்டார் சேவையின் கீழ் கிடைக்கும் 3 மாத கால மொபைல் சந்தாவின் விலை ரூ.149 ஆகும்
அதாவது ரூ.195 கிரிக்கெட் பிளான் ஆனது கூடுதலாக வெறும் ரூ.46 க்கு 15ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது என்று அர்த்தம். இந்த டேட்டா கிரிக்கெட் போட்டிகளை லைவ் ஸ்ட்ரீமிங் செய்ய மிகவும் பயனுள்ளதாக இருக்கும், குறிப்பாக 4ஜி ஸ்மார்ட்போன் அல்லது அன்லிமிடெட் 5ஜி டேட்டா இல்லாத டேட்டா பேக்கை பயன்படுத்துபவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.