வெறும் ரூ.20க்கு ரீசார்ஜ் செய்தால் 4 மாதம் வேலிடிட்டி!- வெளியான அதிரடி ஹேப்பி நியூஸ்!! TRAI New Rules 20 Rupees for 4 Months Validity

வெறும் ரூ.20க்கு ரீசார்ஜ் செய்தால் 4 மாதம் வேலிடிட்டி!- வெளியான அதிரடி ஹேப்பி நியூஸ்!!

TRAI New Rules 20 Rupees for 4 Months Validity

TRAI New Rules 20 Rupees for 4 Months Validity: இந்தியாவில் பெரும்பாலானோர் இரண்டு சிம் கார்டுகளை பயன்படுத்துகின்றனர். ஆனால் 2024 ஜூலை முதல் ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி விட்டதால் பல பயனர்கள் பிஎஸ்என்எல் பக்கம் சென்றனர்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group  Join
 Whatsapp ChannelJoin
TelegramJoin
 
TRAI New Rules 20 Rupees for 4 Months Validity
TRAI New Rules 20 Rupees for 4 Months Validity

சிலர் ஒரு சிம் மட்டும் வைத்துக் கொண்டு மற்றொரு சிம்மை க்ளோஸ் செய்தனர். இந்நிலையில், கட்டண உயர்வால் சிரமப்படும் வாடிக்கையாளர்களுக்கு TRAI நற்செய்தியை வழங்கியுள்ளது.

TRAI New Rules 20 Rupees for 4 Months Validity

TRAI விதிகளின்படி, இனிமேல் வாடிக்கையாளர்கள் குறைந்த விலையில் நீண்ட காலத்திற்கு சிம்மை இயக்க முடியும். பொதுவாக, ஒவ்வொருவரும் தங்களின் இரண்டாவது சிம்மைத் தனிப்பட்ட முறையில் வைத்திருப்பார்கள். இந்த எண் நெருங்கிய நபர்களுடன் மட்டுமே பகிரப்படும். விலைவாசி உயர்வு காரணமாக, பலர் தங்களது இரண்டாவது சிம்மை செயலிழக்கச் செய்ய எண்ணினர்.

சிம்மை செயலில் வைத்திருக்க குறைந்தபட்சம் ரூ.200 ரீசார்ஜ் செய்ய வேண்டும். ஆனால் இப்போது இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் பயனர்களுக்கு ஒரு நல்ல செய்தியை வழங்கியுள்ளது. அதாவது ரீசார்ஜ் முடிந்த 90 நாட்களுக்கு உங்கள் சிம் செயலில் இருக்கும். 90 நாட்களுக்குப் பிறகு, சம்பந்தப்பட்ட நெட்வொர்க்கில் இருந்து உங்களுக்கு அழைப்பு வரும். உங்கள் திட்டம் முடிந்த பிறகு சிம் 3 மாதங்களுக்கு செயலில் இருக்கும்.

TRAI New Rules 20 Rupees for 4 Months Validity

நீங்கள் எந்த திட்டத்தையும் செயல்படுத்தாவிட்டாலும் உங்கள் சிம் 90 நாட்களுக்கு செயலில் இருக்கும். 90 நாட்களுக்குப் பிறகும் நீங்கள் ரீசார்ஜ் செய்யவில்லை என்றால், உங்கள் சிம்மில் ரூ.20 ப்ரீபெய்ட் பேலன்ஸ் இருந்தால் நிறுவனம் அதைக் கழிக்கும். ரூ.20 கழித்த பிறகு சிம்மின் வேலிட்டி காலம் 30 நாட்களுக்கு நீட்டிக்கப்படும். அதாவது எந்த திட்டமும் இல்லாமல் உங்கள் சிம் 120 நாட்களுக்கு அதாவது 4 மாதங்களுக்கு செல்லுபடியாகும். இந்த 4 மாத வேலிடிட்டிக்கு வெறும் ரூ.20 செலுத்தினால் போதும்.

டிராய் விதிகளின்படி இந்த 120 நாட்களுக்குப் பிறகு, சிம் கார்டு பயனர்கள் தங்கள் எண்ணை மீண்டும் செயல்படுத்த 15 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். இருப்பினும், இந்த 15 நாட்களுக்குள் பயனர் தனது எண்ணை இயக்கவில்லை என்றால், அவரது எண் முற்றிலும் தடுக்கப்படும். உங்கள் எண் லாக் செய்யப்பட்டவுடன் அந்த எண் வேறொருவருக்கு வழங்கப்படும். டிராய் உத்தரவின்படி ஜனவரி 23 முதல் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் குறைந்த கட்டண ரீசார்ஜ் திட்டங்களை வெளியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

error: Content is protected !!