Signal Problems end Good News for Jio Bsnl Airtel users
இனி சிக்னல் பிரச்சனை கிடையாது.. BSNL, Jio, Airtel வெளியான முக்கிய அறிவிப்பு
தடையின்றி ‘போன்’ பேச வருகிறது புதிய சேவை
Signal Problems end Good News for Jio Bsnl Airtel users இனி சிக்னல் தடையின்றி போன் பேச வரும் புதிய சேவை மத்திய அரசு அறிவிப்பு.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
ஜியோ, பிஎஸ்என்எல் மற்றும் ஏர்டெல் பயனர்கள் சந்திக்கும் சிக்னல் பிரச்சனைகளுக்கு புதிய தீர்வு பிறந்துள்ளது. இந்த சிம்களை பயன்படுத்துவோர் தங்கள் நெட்வொர்க் சிக்னல் கிடைக்காமல் போனாலும் மற்ற நிறுவங்களின் சிக்னலை பயன்படுத்தி 4G வாய்ஸ் கால் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஜனவரி 17 அன்று, டிஜிட்டல் பாரத் நிதி (DBN) திட்ட நிகழ்வின்போது போது இந்த இன்ட்ரா சர்க்கிள் ரோமிங் (ICR) வசதியை அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இருப்பினும் DBN திட்டத்தின் கீழ் டவர்கள் இருக்கும் இடங்களில் மட்டும் இந்த சேவை அமலுக்கு வந்துள்ளது. சுமார் 27,000 டவர்களைப் பயன்படுத்தி, 35,400க்கும் மேற்பட்ட கிராமப்புற மற்றும் தொலைதூர கிராமங்களுக்கு தடையற்ற 4G இணைப்பு வழங்களை மேம்படுத்துவதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.
பி.எஸ்.என்.எல்., ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ’ பயனாளர்கள் தங்கள் நிறுவன சேவை இல்லாத இடங்களில், ‘இன்டர்நெட்’ மற்றும் குரல் அழைப்புகளுக்கு மற்ற நிறுவனங்களின், ‘டவர்’களை பயன்படுத்தும் சேவையை மத்திய அரசு துவங்கியுள்ளது.
மொபைல் போன் இணைப்பு சேவை அளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கென பிரத்யேகமான டவர்களை வைத்துள்ளன. குறிப்பிட்ட இடத்தில் ஒரு நிறுவனத்தின் டவர் பலவீனமாக இருக்கும்போது, அழைப்புகளில் தடங்கல் ஏற்படுகிறது.
இந்த நிலைமையை சரிசெய்ய ஐ.சி.ஆர்., எனப்படும், ‘இன்ட்ரா சர்க்கிள் ரோமிங்’ சேவையை தொலை தொடர்புத்துறை அமைச்சகம் துவக்கி உள்ளது. இதற்காக, டி.என்.பி., எனப்படும், ‘டிஜிட்டல் பாரத் நிதி’ என்ற நிதியத்தை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. இந்த நிதியை பயன்படுத்தி, 27,836 இடங்களில் புதிய மொபைல் போன் டவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த டவர்களில், பி.எஸ்.என்.எல்., ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ ஆகிய நிறுவனங்கள் தங்கள் சேவையை பகிர்ந்து கொள்ள உள்ளன.
இந்த மூன்று சேவைகளில் ஒன்றை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், டவர் கிடைக்காத இடங்களில் இந்த மூன்றில் ஒரு நிறுவனத்தின் சேவையை பயன்படுத்தி 4ஜி மற்றும் குரல் அழைப்பு சேவைகளை தடையின்றி பயன்படுத்த முடியும்.