EPFO பயனாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான தகவல்-இலவசமாக ரூ.50,000 பெறலாம்!!
EPFO New Happy Announcement Released 2024
EPFO New Happy Announcement Released 2024 EPFO பயனாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான தகவல் வெளிவந்துள்ளது அத்தகவல் என்னவென்றால் இலவசமாக நீங்கள் ரூபாய் 50,000 பலனை அடைய முடியும் எவ்வாறு ரூபாய் 50,000 பலனை நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும் என்பதை பற்றி இப்பதிவில் நாம் தெளிவாக காணலாம்.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
எம்ப்ளாயீஸ் பிராவிடண்ட் ஃபண்ட் நிறுவனம் (Employees Provident Fund Organisation) அல்லது EPFO என்பது இந்தியாவில் உள்ள எம்ப்ளாயிகளின் பொருளாதார எதிர்காலத்தை பாதுகாப்பதில் மிக முக்கிய பங்காற்றி வருகிறது. பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் கூட பொருளாதார நிலைப்பாட்டை உறுதி செய்வதற்காக அதன் கஸ்டமர்கள் அல்லது சப்ஸ்கிரைபர்களுக்கு முறையான ஓய்வு கால சேமிப்பு திட்டங்களை இந்த நிறுவனம் வழங்கி வருகிறது.
எனினும் EPFO சம்பந்தப்பட்ட ஒரு சில விதிகள் பற்றி சப்ஸ்கிரைபர்கள் பலருக்கு தெரிவதில்லை. அந்த விதிகளில் ஒன்று லாயல்டி கம் லைஃப் பெனிஃபிட் (loyalty-cum-life benefits). இந்த விதி மூலமாக எம்ப்ளாயி 50,000 ரூபாய் வரையிலான நேரடி பலனை பெறலாம். ஆனால் இதற்கு ஒரு நிபந்தனை உள்ளது. இந்த விதியைப் பற்றியும், அதற்கான நிபந்தனை என்ன என்பது பற்றியும் இந்த பதிவின் மூலமாக விளக்கமாக பார்க்கலாம்.
இந்த பலனை நீங்கள் எப்போது பெறலாம்?
அனைத்து PF அக்கவுண்ட் ஹோல்டர்களும் வேலை மாற்றம் ஆன பிறகும் கூட தொடர்ச்சியாக தங்களுடைய அதே EPF அக்கவுண்டில் பங்களித்து வர பரிந்துரை செய்யப்படுகிறார்கள். ஒரே அக்கவுண்டில் தொடர்ச்சியாக 20 வருடங்கள் பங்களித்த கஸ்டமர்கள் லாயல்டி கம் லைஃப் பெனிஃபிட் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள இந்த விதி அனுமதிக்கிறது.
இந்த திட்டம் மூலமாக நீங்கள் எவ்வாறு பயன் அடையலாம்?
ஒரு அக்கவுண்ட் ஹோல்டர் தன்னுடைய EPF அக்கவுண்டில் தொடர்ச்சியாக 20 வருடங்களுக்கு பங்களித்து வரும் பட்சத்தில், லாயல்டி கம் லைஃப் பெனிஃபிட் மூலமாக பயனடையலாம் என்பதை CBDT பரிந்துரை செய்கிறது. மத்திய அரசு இந்த திட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன் மூலமாக வழக்கமான முறையில் 20 வருடங்களுக்கு பங்களிப்புகள் செய்யும் சப்ஸ்கிரைபர்கள் கூடுதலாக 50,000 ரூபாய் பலனை பெற்றுக் கொள்ளலாம்.
யாரெல்லாம் இதன் மூலம் பயன் அடையலாம்?
லாயல்டி கம் லைஃப் பெனிஃபிட் இன் கீழ், 5000 ரூபாய் வரையிலான அடிப்படை சம்பளம் வாங்கும் நபர்கள் 30,000 ரூபாய் வரை பலன் பெறலாம். அதே நேரத்தில் 5001 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை அடிப்படை சம்பளம் வாங்கும் நபர்கள் 40,000 ரூபாய் பலனையும், 10,000 ரூபாய்க்கு மேல் அடிப்படை சம்பளம் வாங்கும் நபர்கள் 50,000 ரூபாய் பலனையும் பெறலாம்.
இந்த பலனை பெறுவதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
வேலை மாற்றம் ஆனால் கூட EPFO சப்ஸ்கிரைபர்கள் தொடர்ந்து தங்களுடைய ஒரே EPF அக்கவுண்டில் பங்களித்து வந்தாலே போதுமானது. இதற்கு வேலை மாற்றம் ஆன பிறகு உங்களுடைய பழைய நிறுவனம் பற்றி தற்போதைய நிறுவனத்திடம் நீங்கள் வழங்க வேண்டும். இந்த எளிமையான ஒரு நிபந்தனையை பின்பற்றி வந்தால் கூடுதலாக 50,000 ரூபாய் பலனை நீங்கள் அனுபவிக்கலாம். இதனை மனதில் வைத்துக் கொண்டு செயல்படுங்கள்.