மார்ச் 8 மகளிர் தினம் 2025- கொண்டாடுவதற்கான காரணம் என்ன தெரியுமா? சூப்பர் அப்டேட்!..
Womens Day 2025

ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மகளிர் தினம் ஒரு சிறப்பு தீம் உடன் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான தீம் “செயல்களை துரிதப்படுத்து” என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் தீம் ஆனது பெண்களின் உரிமைகள் மற்றும் அதிகாரமளிப்புகளை நோக்கி வேகமாக நகர வேண்டிய நேரம் இப்போது வந்துவிட்டது, பேசுவது மட்டுமல்ல, உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதாகும்.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
சர்வதேச மகளிர் தினம் என்பது 1908 ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சுமார் 15 ஆயிரம் பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக ஒரு மாபெரும் பேரணியை பெண்கள் நடத்தியதில் இருந்து தொடங்கியது. வேலை நேரத்தைக் குறைத்தல், செய்த வேலைக்கு ஏற்ற ஊதியம், வாக்குரிமை ஆகியவையே இந்தப் பெண்களின் கோரிக்கையாக இருந்தது. பெண்களின் இந்த போராட்டத்திற்கு ஒரு வருடம் கழித்து, அமெரிக்காவின் சோசலிஸ்ட் கட்சி முதல் தேசிய மகளிர் தினத்தை கொண்டாடுவதாக அறிவித்தது மற்றும் 1909 இல், அமெரிக்காவில் முதல் ‘தேசிய மகளிர் தினம்’ கொண்டாடப்பட்டது.
1910 ஆம் ஆண்டில், சர்வதேச அளவில் மகளிர் தினத்தை கொண்டாடுவதற்கான முன்மொழிவை ஜெர்மன் பெண் கிளாரா ஜெட்கின் முன்வைத்தார். அப்போது ஐரோப்பிய நாடான டென்மார்க்கின் தலைநகர் கோபன்ஹேகனில் நடைபெற்ற உழைக்கும் பெண்களுக்கான சர்வதேச மாநாட்டில் கிளாரா கலந்து கொண்டார். அங்கிருந்த அனைத்து பெண்களும் அவருக்கு ஆதரவளித்தனர், அதன் பிறகு, 1911 ஆம் ஆண்டில் ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்தில் முதல் முறையாக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
Womens Day 2025
மார்ச் 8, 1917 இல், ரஷ்யாவில் பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக வேலைநிறுத்தம் செய்தனர். இதைத் தொடர்ந்து, இந்த நாளை மனதில் வைத்து, 1975 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி கொண்டாட ஐக்கிய நாடுகள் சபை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது.இதனையடுத்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 1977 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபை, மார்ச் 8 ஆம் தேதியை ‘பெண்கள் உரிமைகள் தினமாக’ கொண்டாட அறிவித்தது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பெண்களின் சாதனைகள் மற்றும் பங்களிப்புகளை நினைவுகூர்வதும், பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த விழிப்புணர்வை சமுதாயத்தில் அதிகரிப்பதும் இந்த தினத்தை கொண்டாடுவதன் முக்கிய நோக்கமாகும்.
இந்த நாள் ஒரு கொண்டாட்டம் மட்டுமல்ல, பெண்களின் உரிமைகள் மற்றும் சாதனைகளை அங்கீகரித்து அவர்களுக்கு எதிரான பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு முக்கியமான முன்முயற்சியாகும். இந்த நாளின் முக்கிய நோக்கம் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல், பாலின சமத்துவத்தை உறுதி செய்தல் மற்றும் சமூகத்தில் பெண்களின் பங்கை மேலும் வலுப்படுத்துதல் ஆகும்.