TNPSC New OMR Pdf Download
TNPSC அறிவிப்பு : சற்று முன் அறிவிப்பு இனிவரும் தேர்வில் புதிய மாற்றம் – டிஎன்பிஎஸ்சி
TNPSC New OMR Pdf Download : சற்று முன் அறிவிப்பு இனிவரும் தேர்வில் புதிய மாற்றம் – டிஎன்பிஎஸ்சி .அரசு துறைகளில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான காலி பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தி வருகிறது. இந்த நிலையில், ஓ.எம்.ஆர். விடைத்தாளில் சில மாற்றங்களை டி.என்.பி.எஸ்.சி. செய்துள்ளது.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
TNPSC இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
தேர்வாணையம் ஓ.எம்.ஆர். (OMR) விடைத்தாளில் ஒரு சில புதிய நடைமுறையினை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய ஒ.எம்.ஆர். விடைத்தாளின் மாதிரி படமானது தேர்வாணய இணையதளத்தில் www.tnpsc.gov.in “OMR Answer Sheet – Sample” என்ற தலைப்பின்கீழ் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
வினாத்தொகுப்பு எண் வட்டங்கள் கருப்புநிற பேனாவினால் (ballpoint pen) நிரப்புவது தொடர்பாகவும், மேலும், பக்கம்-1ல் பகுதி-1ன் கீழ் உள்ள கண்காணிப்பாளரின் கையொப்பம் பக்கம்-2ல் பகுதி 1ன் கீழ் மாற்றப்பட்டுள்ளதும் மாதிரி விடைத்தாளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே. தேர்வர்கள் தேர்வாணையத்தினால் நடத்தப்படும் இனிவரும் தேர்வினை எழுத வருவதற்கு முன்பு புதிய ஓ.எம்.ஆர். விடைத்தாளின் மாதிரியை பார்த்து அறிந்து தேர்வு எழுத வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
TNPSC NEW OMR PDF Click