BREAKING: வீடுகளுக்கு புதிய மின்சார இணைப்பு.. கட்டாயம்..வெளியான அதிமுக்கிய அறிவிப்பு உடனே படிங்க!!
TNEB Latest News Today May 31
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
TNEB Latest News Today May 31 புதிய மின்சார இணைப்பு கூறுகின்ற நபர்கள் மின்சார கசிவு காப்பு சாதனத்தை கட்டாயமாக பொருத்த வேண்டும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இது குறித்து மாநிலம் முழுவதும் உள்ள அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது .இது குறித்து பேசிய மின்வாரிய அதிகாரி ஒருவர் இந்த சாதனத்தின் மதிப்பு ரூபாய் 2000 முதல் ரூபாய் 4000 வரை காணப்படும். இதனை வீதிகளில் மக்கள் கட்டாயம் பொருத்திக் கொள்ள வேண்டும்.
இந்த கருவியானது மின் கசிவை கண்டுபிடித்தால் ஆட்டோமேட்டிக்காக பீஸ் போக செய்து விடும் என்றார். பொதுவாக மின்சாரங்கள் சில நேரங்களில் லீக் ஆகி விபத்தை ஏற்படுத்துகின்றன. இதிலிருந்து நுகர்வோரை காக்க இந்த சாதனமானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
TNEB Latest News Today May 31
இந்த கருவியின் பெயர் “ரெடுசியல் கரண்ட் டிவைஸ்” ஆகும் இந்த கருவி தொடர்பான பயன்பாடுகள் குறித்து விழிப்புணர்வை 2021 முதலே தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தி வருகிறது. கடந்த சில வாரங்களிலேயே நாமக்கல்லில் லேப்டாப் சார்ஜ் செய்த பெண் ,மருத்துவர் தரணிதா மின்சாரம் தாக்கி உயிர் இழந்தார். விழுப்புரத்தில் மின்மோட்டார் ஆன் செய்த 70 வயது மூதாட்டி ஒருவர் மின்சாரம் தாக்கி உயிர் இழந்தார். என்பது குறிப்பிடத்தக்கது,
எனவே மின்வாரிய அதிகாரிகள் புதியதாக மின் இணைப்பு கூறுபவர்கள் கட்டாயமாக இந்த சாதனத்தை வீட்டில் பொருத்திக் கொள்ள வேண்டும் என்பதை அறிவுறுத்தி வருகிறது.